l மதுரை வக்ஃபு வரிய கல்லூரியில் பேராசிரியர்கள் நியமனம் குறித்து இரு அ.தி.மு.க. அமைச்சர்கள் தொடர்பாக மத்திய புலனாய்வு கழகம் விசாரணை.
l சத்துணவு திட்டத்தில் ரூ.2400 கோடி முறைகேடு
l நெடுஞ்சாலை ரூ.3100 கோடி ஊழல்- முதல்வர் தனது உறவினர்களுக்கு டெண்டர் கொடுத்ததாக புகார்.
l உள்ளாட்சி துறை மற்றும் ஊரக துறைகளில் ஊழல்
l பள்ளி மாணவர்களுக்கு தரப்படும் சைக்கிள், செருப்பு, மடிக்கணினி, பைகள் ஆகியவை கொள்முதலில் ஊழல். மடிக்கணினி கொள்முதலில் சுமார் ரூ.235கோடி கமிஷன்; சைக்கிள்கள் கொள்முதலில் ரூ.106 கோடி கமிஷன்; செருப்பு கொள்முதலில் ரூ.14 கோடி கமிஷன்
l குட்கா ஊழல் ரூ.200 கோடி
l ஸ்மார்ட் சிட்டி ஊழல்
l பருப்பு கொள்முதல் ஊழல் ரூ.400 கோடி
l அண்ணா பல்கலைக்கழக ஊழல் ரூ.200 கோடி
l போக்குவரத்து ஊழல் ரூ.300 கோடி
l சத்துணவு முட்டை கொள்முதல் ஊழல் ரூ.3000 கோடி
l மீனவர்கள் வாக்கி டாக்கி கொள்முதல் ஊழல் ரூ.80 கோடி
l எல்.ஈ.டி. பல்பு கொள்முதல் ஊழல் ரூ.139 கோடி
l நிலக்கரி கொள்முதல் ஊழல் ரூ.18,000 கோடி
l மின்சாரம் கொள்முதலில் ரூ.1,00,000 கோடி
l சிலை திருட்டு முறைகேடுகள்
l அறநிலையத்துறையில் இ பூஜை ஊழல் ரூ.500 கோடி
l குந்தா புனல் மின் நிலைய ரூ.80 கோடி ஊழல்
l பொங்கல் பரிசு பொருட்கள் கொள்முதலில் ரூ.50 கோடி ஊழல்
l தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்புத் திட்டத்தில் ரூ.100 கோடி ஊழல்
l மணல் குவாரி ஊழல்
l பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் மற்றும் பேராசிரியர்கள் நியமன ஊழல் ரூ.250 கோடி
l கோகோ கோலா நிறுவனத்திற்கு நில ஒதுக்கீடு ஊழல்
l ஆவின் பால் கலப்பட ஊழல்
l நீர்நிலை டெண்டர்கள் ஊழல்
l காக்னிசண்ட் எனும் மென்பொருள் நிறுவனம் தனது கட்டிட அங்கீகாரத்திற்கு தந்த கமிஷன் 13 கோடி
என ஏராளமான ஊழல்கள் எடப்பாடி ஆட்சியில் மட்டும் இரண்டு வருடங்களில் நடந்துள்ளன.
சி.எம்.எஸ். எனும் ஆய்வு நிறுவனம் இந்தியாவில் ஊழல் மிகுந்த மாநிலம் எது என ஆய்வு செய்தது. ஊழல் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது தமிழகம்தான்! இதில் ஆச்சர்யமும் இல்லைதான்!
இந்த ஊழல் பட்டியலை வைத்துக்கொண்டுதான் மோடி அரசாங்கம் எடப்பாடி அரசாங்கத்தை மிரட்டுகிறது. தாங்கள் அடித்த கொள்ளையை பாதுகாக்க அ.தி.மு.க. அமைச்சர்கள் மோடி அரசாங்கத்திடம் சரண் அடைந்துள்ளனர்.ஊழல் செய்வதில் ஜாடிக்கு ஏற்ற மூடியாக மோடி அரசாங்கமும் எடப்பாடி அரசாங்கமும் உள்ளன.
தமிழகத்தை பாதுகாக்க ஊழல் எடப்பாடி அரசாங்கத்தையும் மோடி அரசாங்கத்தையும் தூக்கி எறிவது காலத்தின் அவசியம் ஆகும்.
விவரங்கள் ஜூனியர் விகடன்/ எக்னாமிக் டைம்ஸ்/
லைவ் மிண்ட்/ இந்தியன் எக்ஸ்பிரஸ்.
அ.அன்வர் உசேன்