politics

img

எங்கள் ஓட்டு மோடி - எடப்பாடிக்கு இல்ல...

அஞ்சு வருஷத்துக்கு முன்னால ஒரு நாளைக்கு1000 முதல் 1500 ரூபா சம்பாதித்தேன். இப்போ ஒரு நாளைக்கு 500 ரூபாய் சம்பாதிப்பதே மிகவும் கடினமாக உள்ளது. ஆட்டோ தொழிலில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி கொடுத்ததால்எங்கள் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல கோவையில் தொழில்நசிந்து போனதால் பொதுமக்களிடம் பணப்புழக்கம் இல்லை. எனவே பாஜக அரசு மாற வேண்டும். கோவையைப் பொறுத்து வரை பி.ஆர்.நடராஜன் வரவேண்டும் அவர் தொழிலாளர்களுக்குத் தொழிற்சங்கம் மூலமாகப் போராடிப் பல நன்மைகளைப் பெற்றுத் தந்திருக்கிறார். அவர் வந்தால் தொழிலாளர்களுக்குப் பல சலுகைகளைப் பெற்றுத் தருவார் என்று எதிர்பார்க்கிறோம். கவுண்டம்பாளையம் ஆட்டோ ஓட்டுனர் கணேஷ்.


மோடி அரசாங்கத்தில் ஜிஎஸ்டி கட்டி தான் நாங்கள் சரக்குகளை வாங்கி வர வேண்டி இருக்கு. அதனால கடுமையான விலைஉயர்வு. இதன் காரணத்தால் பொதுமக்கள்எங்களிடம் வாங்குவதை குறைத்துக் கொண்டுள்ளனர். பல நேரங்களில் முதலீட்டில் இருந்து எடுத்து செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது வட்டிக்கு பணம் வாங்கி மாதம் முடிந்தால் வட்டி கூட கட்ட முடியாதஅவல நிலைதான் எங்களுக்கு. அதனால மோடி அரசாங்கம் நிச்சயம் வரக்கூடாது ஆட்சி மாற்றம் வர்ரதுக்குசிபிஎம்முக்கு எங்களமாதிரி சாமானிய மக்கள் ஓட்டு போடுவாங்க. சைக்கிளில் லுங்கி பனியன் விற்கும் தொழிலாளி ரமேஷ்.


தள்ளுவண்டியில் மணிபர்ஸ் உள்ளிட்டவை விற்பனை செய்யும் கனக சாமியிடம் பேசுகையில் எங்களுக்கு வியாபாரமே முழுசா அழிஞ்சு போச்சு பத்து வருஷமா இந்த தொழில் பண்ணுறேன் பல இடங்களில் இந்த தள்ளு வண்டியை தள்ளிக் கொண்டு போய் நிறுத்தி வேவாரம் பண்ணுவம்ஆனா இன்னைக்கு மக்கள் கூட எந்த இடத்தில்கொண்டுபோய் நிறுத்தினாலும் எங்களுக்கு வியாபாரமே நடக்கவில்லை ஒரு நாளைக்கு 500 1000 சம்பாதிக்கிறது பெரிய கஷ்டமா இருக்கு ஒரு நாள் கூலி கூட எங்களுக்கு கிடைக்க மாட்டேங்குது எங்கள் குடும்பத்தை காப்பாற்றுவது பெரிய விஷயமா இருக்கு எனவே ஆட்சி மாற்றம் வந்த எங்க வாழ்க்கை நல்லா இருக்கும்.


வாகன ஓட்டுனர் பரமேஸ்வரனிடம் பேசுகையில்இந்தஅரசு வந்ததற்குப் பிறகு சிறு குறு தொழில் முழுமையாக நசிந்துவிட்டது எங்களுக்கு ஆன வாடகை கிடைப்பது மிக அரிதாக இருந்தது அதனால இந்த அரசு சிறு குறு தொழில் மேம்படுத்துவதற்கு ஏதேனும்நடவடிக்கை எடுத்தா நல்லா இருக்கும்என நினைக்கிறோம் என்று தெரிவித்தார்


பாஜக அரசு பண்றது கொஞ்சம் கூட சரியில்லபேங்குக்கு போனால் ஆதார் குடுங்கராங்க, அரசாங்க ஆபீஸுக்கு போனா அங்கேயும்ஆதார் குடுங்கராங்க. இதனால பெரியமன உளைச்சலுக்கு ஆளாகிறேம். எனவே இந்த அரசாங்க நிச்சய மாத்தனும். அப்பத்தான் எங்களுக்கு எல்லாம் நல்ல காலம் பிறக்கும். ஓட்டுக்கு காசு கொடுக்கிறேனு சிலர்சொல்றாங்க. ஆனா நாங்க எந்தக் காலத்திலும் ஓட்டுக்குக் காசுவாங்குவதில்லை இப்பவும் வாங்க மாட்டோம். நாங்கள்திமுக கூட்டணியில் உள்ள சிபிஎம்முக்குத்தான் ஓட்டு போடுவோம் என்றார் துப்புரவு தொழிலாளிபட்டீஸ்வரம்.


ஜிஎஸ்டி வரிவிதிப்பு, பண மதிப்பிழப்புகாரணமாக பனியன் உற்பத்தி தொழில் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில் வடநாட்டு தொழிலாளர்களும் இங்கு வந்து குவிந்ததால்இப்பகுதியில் உள்ளவர்களுக்கு தமிழ் நாட்டில் உள்ளவர்களுக்கு வேலை இல்லாத சூழல் ஏற்பட்டு உள்ளது இதனால்பல குடும்பங்கள் மீண்டும் சொந்த ஊருக்குச் சென்று பிழைப்பதற்கு வழியில்லாமல் தவித்து வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. - பல்லடம் பூபேஷ்.


பாப்பா என்பவரிடம் பேசுகையில் அம்மா இருந்தபோது எங்களுக்கெல்லாம் நல்லது பண்ணாங்கஆனா இப்ப இருக்குறவங்க அவங்களுக்கு தேவைகளை மட்டுமே பார்த்துக்கிறாங்க நாங்ககாங்கிரஸ்கட்சிக்குத்தான் ஓட்டுபோடனும்னு நினைச்சா அவன்வந்தால் நல்லது பண்ணனும்னு சொல்லி இருக்காங்க அதனால அங்க காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டுப் போடலாம் என்றமனநிலையில் இருக்கிறோம்


முன்ன இருந்தவங்க சரியில்லைனுதான் மோடிக்கு ஓட்டு போட்டோம், ஆனா இந்த அரசாங்கமும் எந்த நல்லதும் பண்ணல.மக்களுக்கு எந்தப் பாதுகாப்பு இல்லை. இதனால மோடி ஆட்சிய மாத்தணும்னு இப்ப நெனைக்கிறோம். புதுசா வரும் அரசாங்கமாவது மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும், நல்லது செய்யும். அதற்கு பக்கபலமாக கோயம்புத்தூர்ல பி.ஆர்.நடராஜனுக்கு ஓட்டுபோட்டு எம்.பி. ஆக்குவோம். - புளியகுளத்தைச் சேர்ந்த பாத்திமா மேரி.


நீட் தேர்வுங்கறது ரொம்ப கொடுமையான விஷயம் தோடு மூக்குத்திஎல்லாம் கழட்டி கொடுக்க சொல்றாங்க, இது எந்த வகையில் நியாயம். நீட் தேர்வு ரத்து ஆகணும்னா மோடி அரசு மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது. புதுசா ஒரு அரசாங்கம் வந்து மாணவர்களுக்கு நலத் திட்டங்களை செய்யணும். அதற்கு உதவியாக கோவைத் தொகுதியில் சிபிஎம் வேட்பாளருக்கு ஓட்டுப் போடலாம்னு இருக்கேன். என்னை மாதிரி ஏராளமான மாணவிகளும் அவருக்குத்தான் ஓட்டுபோடுவாங்க. - கல்லூரி மாணவி கோபிகா.


இந்த அரசாங்கத்தில் கல்லூரி மாணவர்களுக்கு சுதந்திரமே இல்லைங்க இளம் பெண்கள் வெளியே நடமாட முடியாத சூழல் உருவாகி இருக்கு. இந்த அரசாங்கங்களை உடனடியாக மாற்றி அமைக்க வேண்டும். நான் கவர்ன்மென்ட் ஆர்ட்ஸ் காலேஜில் படிக்கிறேன் பொள்ளாச்சி சம்பவத்திற்குப் பிறகு எங்கள் பெற்றோர்கள் எங்களைக் கல்லூரிக்கு அனுப்புவதற்கு பயப்படுறாங்க. பலபேர் காலேஜில் இருந்து நிறுத்துவதற்கான ஏற்பாட்டுடன் இருக்கிறாங்க. எனவே மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் மாற்று அரசாங்கம் வர வேண்டும்.- கல்லூரி மாணவிகள் வைஷ்ணவி, லட்சுமி


மோடி அரசாங்கத்தில் எல்லாம் விலை ஏறிவிட்டது. கேஸ்விலை பெட்ரோல் விலை காய்கறிகள் விலை எனஎல்லாமே கடுமையாக உயர்ந்துவிட்டது. மேலும்பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவே விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கக்கூடிய அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும். - கௌசிகா தேவி.


இந்த அரசு வந்த பிறகு 400 ரூபாயாக இருந்த கேஸ்சிலிண்டர் விலை தொள்ளாயிரம் ரூபாய் ஆகிப்போச்சு. காய்கறி எல்லாம் வாங்கி சாப்பிட முடியாதஅளவிற்கு விலை உயர்ந்து போச்சு. பருப்பு சாதம், சாம்பார் செய்யறதே பெரிய கஷ்டமா இருக்கு. பருப்பு விலை அவ்வளவு உயர்ந்து இருக்கு. ரேஷன் கடையில் கேட்டா பருப்பு இல்லங்குறாங்க. வெளியில வாங்கணும்னா விலை கடுமையாஇருக்கு. மோடி அரசாங்கம் வந்துஎங்களுக்கு எந்த நல்லதும் பண்ணல. எனவே அந்த அரசாங்கத்தை மாற்றியமைக்க நாங்கள் திமுக கூட்டணிக்கு குறிப்பாக கோவையில் சிபிஎம்முக்குவாக்களிப்போம். ராமநாதபுரத்தைச் சேர்ந்த குடும்பத்தலைவி சாந்தி.


பிஜேபிக்கு நான் ஓட்டு போடமாட்டேன். நான் ஒரு விதவை. பென்சன் கேட்டு இவங்க கிட்ட எத்தன தடவ மனு கொடுத்தும் கிடைக்கல. கேஸ்க்கும், கேபிளுக்கும் விலை கூட்டிட்டாங்க, இவங்களுக்கு எப்படி ஓட்டுபோட முடியும். 


- பழனியம்மாள் - பாரதிநகர்


எல்லா பொருளும் விலை ஏறியிருக்கு. வாங்குற சம்பளத்தில குடும்பம் நடத்தி முடியல. இதுக்கு காரணமா இருக்கிற பிஜேபி - அதிமுகவுக்கு ஓட்டுபோட மாட்டேன். கம்யூனிஸ்ட் கட்சிக்கு தான் ஓட்டு போடுவேன். 


- சித்ரா - ராஜாஜி நகர்


எங்க ஊரு தருமபுரி. முன்ன 50 ரூபா இருந்தா ஊருக்குபோனோம். பஸ் சார்ஜ இப்ப150 ரூபா ஆயிடுச்சி. வேலையும் முன்ன மாதிரி இல்ல. சம்பளமும் சரியா கிடைக்கிறதில்ல. அதுமுகவும் பாஜகவும் இதுக்கு காரணமா இருக்கிறப்ப இவங்களுக்கு ஓடடு போட மாட்டேன்.


- சிந்தனை செல்வி - ராமநாதபுரம்


எங்க அப்பா, அம்மா அதிமுகவுக்கு ஓட்டு போடுறவங்க. இப்பதான் முதல் ஓட்டு போடப்போறேன். டாஸ்மாக்கடையை மூடுவோம்னு திமுக சொல்லியிருக்கு. அவங்க கூட்டணியில இங்க நிக்கிற கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஓட்டு போடுவேன். பொள்ளாச்சியில பொம்மள பிள்ளைகள கொடுமை படுத்தினவங்களுக்கு அதிமுக காரங்க சப்போர்ட்டா இருக்கிறாங்க. எங்களுக்கு பாதுகாப்பே இல்லாதப்ப எப்படி அவங்களுக்கு ஓட்டுபோட முடியும். பெயர் குறிப்பிட விரும்பாத முதல்முறை பெண் வாக்காளர் - ஒலம்பஸ்


ரேசன்ல சரியா பொருளு கிடைக்கல. பெண்களுக்கு பாதுகாப்பு இல்ல. பாஜகவுக்கு ஓட்டு போடமாட்டேன்.- குப்பு


சந்திரா (சமையல் தொழிலாளி) 


5 ஆண்டுக்கு முன்பு கேஸ் சிலிண்டர் விலை 380இல் இருந்து 420 ரூபாய் வரைதான் இருந்தது. இப்போதுகேஸ் சிலிண்டர் விலை 900 ரூபாய் வரை இருக்கிறது. வங்கி கணக்கில் மானியத்தை மாதம் தோறும் ரூ.150 செலுத்துவோம் என்றார்கள். ஆனால் 200 என்று ஒரு சில மாதங்கள் வந்தாலும் தொடர்ந்து வருவதில்லை. இதன் காரணமாக. இந்த முறை கம்யூனிஸ்ட் திமுக கூட்டணிக்குத்தான் எங்கள் வாக்கு.


ஜமுனா (கூலித்தொழிலாளி)


இந்த ஐந்து வருஷத்துல100 நாள் வேலை எங்களுக்கு சரியாக தரவில்லை. வருஷத்துல 80 நாள் 75 நாள் தான் வருது. அதிலேயே சம்பளம் பார்த்தோம்னா 216 ரூபாய் எங்களுக்கு சம்பளம். ஆனா அவங்க குடுக்குறது நாள் ஒன்றுக்கு150 ,145 எங்களுக்கு சம்பளம் வருது. வங்கியில் மாதந்தோறும் நாங்க போய் பார்க்கும்போது இதுதான் எங்களுடைய அன்றாட கூலி என்பது தெரியுது இப்படி இருக்கிற நிலை காரணமாக இந்த முறை பிஜேபி அதிமுக கூட்டணிக்கு நாங்க வாக்களிக்க மாட்டோம். நாங்க நீலகிரி தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிப்போம்.


நாராயணசாமி (ஆட்டோ தொழிலாளி) 


நான் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்தேன்.பிஜேபியோடு கூட்டணி வைத்ததன் காரணமாக நான் வந்து திமுகவில் இணைந்து விட்டேன். இந்த 5 வருஷத்துல பிஜேபி அரசு பெட்ரோல் டீசல் விலையை கடுமையாக உயர்த்திவிட்டது. தேர்தலுக்கு முன்னால் 90 ரூபாயைத் தொட்ட பெட்ரோல் விலை இப்போது 75 ரூபாய்க்குக் குறைஞ்சிருக்கு. இதெல்லாம் மக்களை ஏமாற்றுகின்ற பிஜேபி அரசின் வேலை நாங்கள் ஏமாற மாட்டோம். இந்த தடவை கண்டிப்பாக ஆட்டோ தொழிலாளர்கள் திமுகவுக்கு ஓட்டுப் போடுவோம். திமுகவின் கூட்டணிக் கட்சிகளையும் ஆதரிப்போம்.


சுரேந்திரன் 


பிஎஸ்சி ஐடி முடித்துவிட்டு நான் திருப்பூர்துணிக்கடையில் மாதம் எட்டாயிரம் ரூபாய் சம்பளத்திற்கு செல்கிறேன். வருடத்திற்கு இரண்டு லட்சம் இளைஞர்களுக்கு வேலை தருவதாக மோடி ஆட்சிக்கு வருமுன் கூறினார். எங்கே எங்களுக்கு வேலை என்று கேட்டால் போயி பக்கோடா விற்பனை செய்யச் சொல்கிறார். இந்த முறை திமுகவுக்குத்தான் என்னோட வாக்கு.


மோகன் - (டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர்) 


மோடி ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் 50 பைசா உயர்த்தினாலே மிகுந்த சிரமம் ஏற்படுவதாக கூறினோம். ஆனால் தற்போது 20ருபாய்வரை பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துவிட்டது. இதனால் எங்களை போன்ற டிராவல்ஸ் நிறுவனம் நடத்துபவர்கள் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளோம். எங்களின் இழப்பை ஈடுகட்ட பொதுமக்களிடம் வசூலிக்கவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளோம். விவசாயிகள் தற்கொலை என்னை மிகுந்த வருத்தத்திற்கு ஆளாக்கியுள்ளது. பணமதிப்பு நீக்க நடவடிக்கையின்போது பொதுமக்கள் பட்ட கஷ்டங்களை கண்முன்னால் பார்த்துள்ளேன். இதுபோல கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகியுள்ளோம்.


ராஜா முகம்மது - (துணி மற்றும் எலக்ட்ரானிக் கடை உரிமையாளர்) 


மத்திய அரசின் நடவடிக்கைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டது எங்களை போன்ற சிறிய அளவில் வியாபாரம் செய்யும் வியாபாரிகள்தான். ஜிஎஸ்டி வரியால் நாங்கள்வாங்கும் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து விட்டது. மேலும் சிறுவியாபாரியான நாங்கள் கட்டாயமாக ஜிஎஸ்டிக்குள் கொண்டுவரப்பட்டுள்ளோம். இதன் காரணமாக மக்களிடம் பொருட்களை விற்பதில் கடும் சிரமம்ஏற்பட்டுள்ளது. விலைவாசி உயர்ந்துள்ளதால் மக்களும் அதிகமாக பொருட்களை வாங்குவதில்லை. இந்நிலையில் ஜிஎஸ்டியால்தொழில் நஷ்டமானாலும் கட்டாயமாக கணக்கு காட்டவேண்டியுள்ளது. பணமதிப்பு நீக்க நடவடிக்கையின்போது சுமார் 1 மாதம்பணத்தை மாற்றுவதற்காக அலைந்து தொழில் பாதிப்புக்குள்ளானது. அதுமட்டுமல்ல இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர் என்ற வேறுபாடின்றின்றி இருந்த மக்களிடம் பிரிவினையை ஏற்படுத்தும் முயற்சியில் இந்த மோடி அரசு செயல்பட்டுள்ளது.


ஜாபர் சாதிக் (ஐஸ்க்ரீம் கடை)


இந்த ஆட்சி வந்த பிறகு கஷ்டங்கள் நிறைய வந்திருக்கிறது. வியாபாரம், தொழில் ரொம்ப நலிவடைந்து இருக்கிறது. கேவலமான ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. மக்கள் நிம்மதியான வாழ்க்கை வாழ மோடி ஆட்சி மாற வேண்டும்.


தாமஸ் (மளிகை கடை)


மத்தியில் பாஜக ஆட்சி தொடர வேண்டுமா? எனக் கேட்டதற்கு ஆவேசமடைந்த தாமஸ், மாறணும். புள்ளைக்கு கல்யாணம் வச்சிருந்தேன். ரூபாய் நோட்டு செல்லாது சொன்னப்புறம், வங்கியிலிருந்து 7 லட்ச ரூபாய எடுக்க முடியல.ரொம்ப தொல்லை, கஷ்டப்பட்டோம். வரிசையில் நின்னு ஆயிர, ஆயிரமா சேர்த்தோம். ஒவ்வொருத்தரும் உதவி செய்தாங்க. இந்த ஆட்சி நமக்கு அவசியமில்லை.


மன்சூர் (மருந்துக்கடை)


மோடி ஆட்சியில் ஜனங்கள் ரொம்ப கஷ்டப்படறாங்க. விலைவாசி உயர்ந்து கொண்டேயிருக்கிறது. மருந்துகளின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. வரி அதிகமாகி விட்டது. இன்சுலின், இன்ஜெக்சன் மருந்துகள் விலை கூடியுள்ளது. 10 ரூபாயாக இருந்த அஸ்டாலின் இன்று 49ரூபாயாக உயர்ந்துள்ளது. ஆன்லைன்ல மருந்து விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. 13 ஆண்டுகளுக்கு மேலாக மருந்து விற்பனை செய்து வருகிறேன். இவ்வளவு கஷ்டம் இல்லை. இனியொரு முறை இவர்கள் ஆட்சிக்கு வந்தால் யாரும் தொழில் செய்ய முடியாது.


ஜெர்மிளா (குடும்ப தலைவி)


மோடி ஆட்சியில் பாதுகாப்பு இல்லை. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக நடக்கிறது. ஆகையால் இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும்.


முகமது இப்ராஹிம் (பொம்மை கடை வியாபாரி)


பணமதிப்பிழப்பு அறிவிச்சதற்கு பிறகு சிறு தொழில்கள் நலிவடைந்து விட்டன. சின்ன சின்ன வியாபாரிகள் கடைய மூடிட்டு, காலிபண்ணிட்டு போய்ட்டாங்க. இப்ப மதத் துவேச அடிப்படையில் ஆட்சி நடைபெறுகிறது. சிறுபான்மை மக்கள், தலித் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆட்சி மாற்றம் வரணும்.


ஜீனத் நிசா


இந்த ஆட்சியில் பெண்கள் மிகவும் கஷ்டப்படறாங்க. 2000 ரூவா தர்றேன்னு வெயிலில் நிற்க வைத்தாங்க. நோட்டு செல்லாதுன்னப்பவும் வெயிலில் நிற்க வைத்தார்கள். ஆதார் கார்டு அவசியம்னு அலைய விட்டாங்க. ஒரு ஜாக்கெட் பிட் எடுத்தா 10 ரூபா ஜிஎஸ்டி கட்ட வேண்டியிருக்கு. 100 கேபிள் கட்டணம் 250க்கு மேல போயிருச்சு. பூ கட்ற வேலைக்கு போகிறேன். இதில் கிடைக்கும் வருமானத்தை வைத்துக் கொண்டு வாழ முடியலை. என்னை நம்பி ஒரு 12ம் வகுப்பு பயிலும் பெண் உள்ளார். இந்த ஆட்சி ஒழிய வேண்டும். 


அமானுல்லா (லாரி ஓட்டுநர்)


மோடி ஆட்சியில் நாடு ஆட்டம் கண்டு போயுள்ளது. லாரி லோடு இறக்கி விட்டு வாடகை கேட்கும் போது, இனி பணமாக தர முடியாது வங்கியில் போடுகிறோம் என சொல்லி அனுப்பி விடுகின்றனர். ஆனால் வாடகை வந்து சேர்வதில்லை. இதனால் தொழில் செய்ய முடியவில்லை. தேர்தல் நாளன்று எங்கு இருந்தாலும் ரயிலேறி வந்து மோடிக்கு எதிராக ஓட்டு போட்டுவிட்டுத்தான் போவேன் என்றார்.


மகமூதா (குடும்ப தலைவி)


நல்லவர்கள் ஆட்சிக்கு வரணும். மோடி மீண்டும் வரக்கூடாது. வந்தால் நாடு இன்னும் கெடும். தப்பு நடக்கும் இடத்தில் நேரடியாக சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க வேண்டும்.விமானத்தில் பறந்து கொண்டே இருக்கக் கூடாது. 100 ரூபாயாக இருந்த கேபிள் கட்டணம் இன்று ஒவ்வொரு சேனலுக்கும், ஒவ்வொரு கட்டணம். 10 ஆம் தேதியன்னிக்கே காசு குடுக்கணும். இல்லேனா, அதற்கு மேல் கட் பண்ணி விடறாங்க. ஒரு ஆளு வருமானத்தில 5000 ரூபாய் வீட்டு வாடகை கட்டி, 500 ரூபா கரண்ட் பில் கட்ட வேண்டியிருக்கு. 100 யூனிட் பிரின்னாங்க. அதுக்கு மேல ஒரு யூனிட் போனா கட்டணம் டபுள் ஆகுது. 


இஜாஸ் 


12ம் வகுப்பு தேர்வு முடிவுகளுக்காக காத்திருக்கிறேன். தமிழகத்தில் நீட் தேர்வு கொண்டு வந்ததால் நிறைய பேரின் எம்பிபிஎஸ் கனவு களைந்து விட்டது. நினைச்ச வாழ்க்கை கிடைக்கலன்னா வாழ்க்கையே வேஸ்ட்டாயிடும். அதனால் பல பேர் மன உளைச்சலுக்கு ஆளாவார்கள். மேலும் படிக்க முடியாது. மகளின், மகனின் வாழ்க்கையைப் பார்த்து பெற்றோர்களும் மன நிம்மதியிழப்பார்கள். இந்நிலைக்கு காரணமானவர்களின் ஆட்சி அகற்றப்பட வேண்டும்.தொகுப்பு: வே.தூயவன், சி.முருகேசன், சக்திவேல், ஆ.ஜீவானந்தம், ராஜா, அருண், மணியாழன் 
;