வியாழன், செப்டம்பர் 23, 2021

politics

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

“மோடிஜியின் ஆட்சிவந்த  பிறகுஇந்த நாட்டில் எந்த  பகுதியிலும் எந்த ஒரு பெரிய   பயங்கரவாத தாக்குதலும் நடக்கவில்லை” என்று மோடி அரசாங்கம் படாடோபமாக கூறிக்கொண்டிருக்கிறது. இது,  மோடி ஆட்சிக்கு வந்த பிறகு நடந்த பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களில் உயிரை இழந்தவர்களின் நினைவுக்கு இந்த அரசு இழைக்கிற மிகப்பெரிய அவமானம் ஆகும். 

1.பெங்களூரு  குண்டு வெடிப்பு, 28 டிசம்பர், 2014 2. ஜம்மு தாக்குதல், 20 மார்ச், 2015 

3. மணிப்பூர் தாக்குதல்,4 ஜூன்  , 2015 

4. குர்தாஸ்பூர் தாக்குதல், 27 ஜூலை , 2015

5. பதான்கோட் தாக்குதல், 2 ஜனவரி, 2016

6. பாம்பூர் தாக்குதல், 25 ஜூன் , 2016 

 இந்த பயங்கரவாத தாக்குதல்களையெல்லாம் நாம் அனைவரும் மறந்துவிட வேண்டும் என்று இப்போது மோடி அரசு விரும்புகிறது. 

                                         **************** 

குடும்பச்சொத்துக்களை  குடும்பத்திற்கு சொந்தமான நகைகளை விற்கும் போது கூட அதிலும் ஊழல் செய்வது என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் மோடி அரசுதான். இவர்களது ஆட்சியில் வங்கிகளுக்கு  செல்வதுஎன்றாலே , மோடி அரசின் கூட்டுக்களவாணி நண்பர் களுக்கு ஒரே கொண்டாட்டம் தான். ஏனென்றால் அவர்களுக்கு பொதுப்பணம் பரிசாக கிடைக்கிறது; வங்கிகளே பரிசுப்பொருளாக மாற்றப்படுகின்றன ; பாதுகாப்பு தளவாட உற்பத்தி ஒப்பந்தங்கள் தாராளமாக தாரைவார்க்கப்படுகிறது . ஒரே ஒரு உதாரணத்தை எடுத்துக்கொள்ளுங்கள்: நிறுவனத்தின் பெயர் - ரிலையன்ஸ் நேவல் ; உரிமையாளர் - அனில் அம்பானி; வங்கி கொடுத்துள்ள கடன் தொகை - ரூ.12,429 கோடி ; இந்த நிறுவனம் திருப்பிச்  செலுத்தியது - வெறும் ரூ.800 கோடி ; அரசாங்கம் தள்ளுபடி செய்தது - ரூ.11,629கோடி (மொத்தக் கடனில் 94 சதவீதம்) 

மேற்படி அனில் அம்பானியின் நிறுவனத்திற்கு கடன் கொடுத்த பொதுத்துறை வங்கிகளான பாரத ஸ்டேட் வங்கி, யூனியன் வங்கி, ஐடிபிஐ வங்கி, பரோடா வங்கி, எக்சிம் வங்கி, சென்ட்ரல் வங்கி, பஞ்சாப் நேசனல் வங்கி, யுனைடெட் வங்கி, ஒபிசி வங்கி, ஐஎப்சிஐ வங்கி உள்ளிட்ட வங்கி நிர்வாகங்கள்  மொத்தமாக ரூ.11,629 கோடி கடன் தொகை யை தள்ளுபடிசெய்துவிட்டு, நீங்கள் வாங்கிய வெறும் 5லட்சம்ரூபாய் கல்விக் கடனுக்காக உங்களை விரட்டிக் கொண்டி ருக்கின்றன.
 

;