வியாழன், செப்டம்பர் 23, 2021

politics

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து..

மொத்த உள்நாட்டு உற்பத்தி நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் அதிகரித்திருப்பதாகவும் இது, பொருளாதாரம் v வடிவத்தில் மீட்சி பெறும் என்றுகடந்த ஆண்டு அரசு முன்கணித்ததை உண்மையாக்கி விட்டது என்றும் ஒன்றிய அர சின் பொருளாதார ஆலோசகர் கே.வி.சுப்பிரமணியன் பெரு மிதப்பட்டிருக்கிறார்.உண்மையில் கடந்த நிதியா ண்டின் முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி24.3சதவீதம் என்று சொன்னார்கள்; நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மொத்தஉள்நாட்டு உற்பத்தி 20.1 சத வீதம்தான். உண்மையில் இதுமைனஸ் விகிதத்தில் சென்றிருக்கிறது.  மிகப்பெரிய அளவிற்கு வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது என்ற உண்மையை நாம் அழித்துவிட முடியாது. இது V வடிவத்திலான மீட்சி அல்ல; மாறாக இது K வடிவத்திலான பொருளா தாரச் சீர்குலைவே ஆகும். K வடிவம் என்றால் பணக்காரர்கள் மேலும் மேலும் பணக்காரர்களாக செல்வங்களைக் குவிக்கிறார்கள்; ஏழைகள் மேலும் மேலும் தங்களது வருமானங்களையும் சொத்துக் களையும் இழந்து பரம ஏழை களாக மாறுகிறார்கள். 

                                                  *************** 

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலைமையுடன் ஒப்பிடும்போது இந்தியா வின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மைனஸ் 9.2 சதவீதம் அளவிற்கு சுருங்கியுள்ளது என்பதுதான் உண்மை. ஏழை, எளிய பொதுஜனங்கள் மிக மிக அதிகபட்ச வரிகளை செலுத்துகிறார்கள்; உணவு, எண்ணெய் விலைகள் விண்ணில் பறக்கின்றன. கார்ப்பரேட் வரிகள் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு குறைக்கப்பட்டுள்ளன.வேலையின்மை, கூர்மை யான முறையிலும் மிக அதிக மாகவும் அதிகரித்துள்ளது. அரசாங்கத்தின் பொது நிதிச் செலவினம் 41.6 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. புதிய முதலீடுகள் 18 சதவீதம் வீழ்ச்சியடைந்து உள்ளன. ஒன்றிய மற்றும் மாநில அரசு களின் புதிய முதலீடுகளைப் பொறுத்தவரை 2020-21ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ரூ.1.6லட்சம் கோடியாக இருந்தது; 2021-22ன் முதலாவது காலாண்டில் ரூ.97,376 கோடியாக 41.6சதவீதம் அளவிற்கு வீழ்ச்சி யடைந்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டிலேயே, இந்த நிதியாண்டு முழுவதும் என்ன நடக்கப்போகிறது என்பதை உணர முடிகிறது. அரசாங்கத்தின் பொது செலவினங் களும் முதலீடுகளும் குறைய குறைய, மேலும் கடுமையான முறையில் பொருளாதாரம் சுருங்கப் போகிறது என்பதே உண்மை.

;