திங்கள், ஜனவரி 25, 2021

politics

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

இதயக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் இருந்த முன்னாள் கிரிக்கெட் கேப்டன் சவுரவ் கங்குலியை நேரில் சென்று நலம் விசாரித்தேன். உடல் ஆரோக்கியத்தோடு மிகவும் நிதானமான உரையாடலை சவுரவ் வெளிப்படுத்தினார். சிறப்பாக இருந்தது. சவுரவ் தேசிய சொத்து. அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்.

                                         **************

விவசாயம் பொய்த்த காரணத்தால் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் விவசாயிகள் கடன் சுமை காரணமாக தற்கொலை செய்து கொள்கின்றனர். விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி இல்லை. முறைசாரா தொழிலாளர்கள் கடுமையான வேலை இழப்புக்கு ஆளாகியுள்ளனர். அவர்களுக்கு நிதி உதவி இல்லை. ஆனால் மோடி அரசாங்கத்தின் கூட்டு களவாணி முதலாளிகள் 2014 ஆம் ஆண்டிலிருந்து 10,10,553கோடி ரூபாய் கடன் தள்ளுபடி என்ற பெயரில் பகற் கொள்ளை அடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுதந்திர இந்தியாவின் செல்வ வளங்களை ஒரு சிலர் சூறையாட தாராள அனுமதி!

                                         **************

புதிய நாடாளுமன்ற கட்டிடமும் பிரதமருக்கு சொகுசு பங்களாவும் கட்டுகின்ற திட்டத்தில் எந்த விதிமுறை மீறலும் இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இரண்டு நீதிபதிகள் இந்தக் கருத்துக்கு ஆதரவாகவும் ஒரு நீதிபதி மாற்றுக் கருத்தும் அடங்கிய தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பிரச்சனை விதிமுறை மீறலா, இல்லையா என்பது அல்ல! மாறாக, கோவிட் பெரும் தொற்று காலத்தில் பசி பட்டினி அதிகரிப்பு/ வேலை இழப்பு, குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைவு, வீழ்ச்சியடையும் பொருளாதாரம் என பல நெருக்கடிகள் முற்றுகையிட்டுள்ள இத்தகைய சூழலில் இந்த ஆடம்பர கட்டிடம் தேவையா என்பதுதான்!

                                         **************

பாரத் பயோ டெக் நிறுவனத்தின் தடுப்பூசி அங்கீகரிக்கப்படுவதற்கு முதல் நாள் கூட அதன் செயல்திறன் முழுமையாக நிலைநாட்டப்படவில்லை என சம்பந்தப்பட்ட அரசாங்க ஆணையம் கூறியிருந்தது. பெரும் தொற்றிலிருந்து விடுதலை பெற தடுப்பூசியை மக்கள் கவலையுடன் எதிர்பார்த்து உள்ளனர். எனவே மக்களிடையே நம்பிக்கை உருவாக்க ஆழமான அறிவியல்பூர்வமான பதில்கள் தேவைப்படுகின்றன. மாறாக, ஆளும் கட்சி தலைவர்கள் அர்த்தமற்ற அரசியல் தாக்குதல்களையும் கூச்சல்களையும் வெளிப்படுத்துகின்றனர். மக்களிடம் நம்பிக்கையை உருவாக்க இது பயன்படாது.

+++++++++++++++++++

தோழர் சீத்தாராம் யெச்சூரி  அவர்களின் கூடுதல் கருத்துக்களை காண கீழ் காணும் லிங்க்-கை கிளிக் செய்யவும்....

முகநூல் : https://www.facebook.com/ComradeSRY/

டுவிட்டர் : https://twitter.com/SitaramYechury

;