செய்தி :- அமைச்சர் ஜெயக்குமார் பந்து வீச எடப்பாடி பழனிச்சாமி கிரிக்கெட் விளையாடினார்.
ச.சா- சிறந்த கிரிக்கெட் வீரர்னு மத்திய அரசு விருது கிடைக்குமோ..??
--------
பாஜக தலைவர் ஜே.பி.நட்டா :- மதம் இல்லாத அரசியல் அர்த்தமற்றது.
ச.சா - நீங்கல்லாம் மதம் பிடிச்சு திரியுறீங்களே..??
--------
செய்தி :- ஐந்தாண்டு தொலை நோக்குத் திட்டம் பற்றி பிரதமர் மோடி ஆலோசனை.
ச.சா - ஜி.எஸ்.டி., பணமதிப்பிழப்பு, 370 நீக்கம், குடியுரிமைச்சட்டம்னு அடுத்த வதைச் சட்டங்கள் எதுன்னு ஆலோசிக்குறாரோ.??
-------
செய்தி :- குடியுரிமைச் சட்டம் பற்றி விளக்க 3 கோடி குடும்பங்களைச் சந்திக்க பாஜக முடிவு.
ச.சா - வாசல்ல கோலம் போட்டுருப்பாங்க.. பாத்துப் போகச் சொல்லணுமே..!!?