இந்தியாவில் டிவிட்டர் ப்ளூ சேவையை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கிய பிறகு பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. டிவிட்டர் அதிகாரப்பூர்வ கணக்குகளுக்கு வழங்கப்பட்ட ப்ளூ டிக் சேவையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த நிலையில், இந்தியா, அமெரிக்கா, கனடா, ஜப்பான், பிரேசில், இந்தோனிஷியா, நியூசிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் டிவிட்டர் ப்ளு சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில், ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு இந்த சேவைக்கான மாத கட்டணமாக ரூ.900, இணைய பயனாளர்களுக்கு ரூ.650 எனவும், ஆண்டு கட்டணமாக ரூ.6,800 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த சேவையில், டிவீட் எடிட் செய்யும் அம்சம், 4 ஆயிரம் எழுத்துகள் வரை டிவீட் செய்து கொள்ளும் வசதி, 60 நிமிடம்/2 ஜிபி அளவு விடியோக்களையும் பதிவேற்றம் செய்து கொள்ளும் வசதி, புக்மார்க் செய்யும் அம்சம், பதிவிடும் டிவீட் மற்ற பயனாளர்கள் பார்வைக்கு தோன்றுவதற்கு முன்னர் Undo செய்யும் அம்சம் ஆகியவை இடம்பெற்றுள்ளது.