internet

img

என் சித்தப்பா சங்கரய்யா... - ஆர்.செல்வராஜ் ,திரைப்பட இயக்குநர், கதாசிரியர்

1962-ஆம் ஆண்டு பேனா-வுக்கு மை நிரப்பி கதைகள் எழுதிக் ்கொண்டிருந்த நேரத்தில் பேனாவுக் குள் மை மட்டுமல்ல, நல்ல கதைகளும் இருக்கிறது என்று வைகை வடகரையில் இருந்த என்னை சென் னைக்கு வரவழைத்தவர்  என்னுடைய சித்தப்பா என்.சங்கரய்யா. இதுவரை இரு நூறுக்கும் மேற் பட்ட படங்களுக்கு கதை வசனம் எழுதியிருந்தா லும் சென்னைக்கு என்னை அழைத்து முகவரி கொடுத்தவர் அவர்தான். தமிழக-கேரள எல்லையில் உள்ள மலையடி வாரத்தில் காணப்படும் அன்னசத்திரத்திற்கு  ஊட்டுப்பிறை  என்று பெயர். இரவு-பகலாக ஆதரவற்று வரும் மக்களுக்கு நீரும், நெருப்பும், சமயத்தில் அரிசியும் வழங்கப்படும். நீண்டகால மாக விளம்பரம் இல்லாமல் நடக்கும் அற்புதச் செயல் இது. சுமை தாங்கிக் கல்லில் தலைச்சுமை யோடும், முதுகுச் சுமையோடும் வருபவர்கள் சுமையை இறக்கிவைத்து இளைப்பாறுவது போல மனிதர்களின் பசிச்சுமையை இறக்கி வைக்கும் இடம்தான் ஊட்டுப்பிறை.

அது போன்ற, ஒரு ஊட்டுப்பிறை சென்னை, குரோம்பேட்டை நியூ காலனியில் இயங்கி வரு கிறது. அதுதான் அன்புத் தோழர் சங்கரய்யா-வின் இல்லம். உடன் பிறந்தோர், உறவுமுறை, நட்பு  சூழ்ந்தவர்கள் மட்டுமின்றி ஏராளமான தோழர்க ளும் வந்து ஆறுதல் பெற்று நம்பிக்கை பெற்று செல்லும் இடம் இது. தோழர் சங்கரய்யா பற்றி குறிப்பிடும்போது அவ ரது துணைவியார் நவமணி அம்மாள் குறித்தும் குறிப்பிட வேண்டும். “வீட்டை அன்பு மயமான சூழலாக்கியதில் அவருக்குப் பெரும் பங்குண்டு. எளிமையான வாழ்க்கை. கைத்தறி உடைகள் தவிர வேறு எதுவும் அணிந்ததில்லை. கணவரிடம் புதுப்புடவை வேண்டும். நகைகள் வேண்டும் என்று கேட்காத மனைவி அவர். இந்தத் தம் பதிகளுக்கு சந்திரசேகர், சித்ரா, நரசிம்மன் என்ற மூன்று வாரிசுகள் மட்டுமல்ல. தமிழகம் முழுவதும் ஏராளமான வாரிசுகள் உண்டு. கணவரிடம் உதவி கேட்டு வருபவர்களிடம் முழு விபரத்தையும் கேட்ட றிந்து எளிமையாகவும், வலிமையாகவும் கணவரிடம் சிபாரிசு செய்வார். நிதிச்சுமையோடும் மனச்சுமை யோடும் வரும் குடும்ப உறவுகள் மட்டுமல்ல, இயக்க உறவுகளும் தீர்வு பெற்றுச் செல்வார்கள்.  தன்னுடைய வீட்டிற்கு மனச்சுமையோடு வரு பவர்களை தோழர் சங்கரய்யா வரவேற்று நலம் விசாரிக்கும் போதே அவர்களுக்கு நம்பிக்கை வந்துவிடும். கொண்டு வந்த பிரச்சனைகள், பட்டா சின் சிறு புகை போல் அடங்கிவிடும். 

தராசின் இரு தட்டுகளாக வாழ்க்கையின் பிரச்ச னையும் ஏறி இறங்கும் போது சங்கரய்யா அவர்க ளின் ஒரு சொல் தராசின் முள் போல் இருந்து இரண் டையும் சமப்படுத்தி வாழ்க்கைக்கான நம்பிக் கையை அளிக்கிறது. எல்லாப் பூக்களையும் விட “மகிழ்ச்சிப் பூ” தான்  என்றும் மணக்கும் என்று பூ தொடுக்கும் சரடுக ளுக்குத் தெரியும். நீர்க் கோடுகளுக்கு நடுவே நீண்டு நிற்கும் கலங்கரை விளக்கு தலைவர் என்.சங்கரய்யா. அவருக்கு நானும் என் குடும்பமும் என்றென்றும் அன்புடன் இருப்போம். தோழரும் சித்தப்பாவுமான சங்கரய்யா பற்றி நினைக்கும்போது மதுரை மண்டையன் ஆசாரி சந்து கட்சி அலுவலகமும், மிகப்பெரிய கலைஞரும் தலைவருமான கே.பி.ஜானகியம்மாளும் விடுத லைப் போராட்ட வீரரும் ஐ.மாயாண்டி பாரதியும் நினைவுக்கு வருகிறார்கள்.

தோழர் மாயாண்டி பாரதியின் வீடு கலை ஞர்களுக்கு ஒரு நிழற்குடை. அந்த நிழலில் வளர்ந்த கலைஞர்கள் தான் பாவலர் வரதராஜன், பாஸ்கர்,  ராசையா (இளையராஜா),  அமர்சிங் (கங்கை அம ரன்). இவர்கள் நால்வரும் நாங்கள் கூடியிருந்த திரு வேங்கடபுரம் பகுதியிலிருந்த என்னுடைய வீட்டிற்கு வருவார்கள். இந்த இசை மேதைகளின் பாடல்களை ரசித்தபடி, தோழர் மாயாண்டிபாரதியை பார்க்க வருவோம். அவர், “காலுக்கு செருப்புமில்லை; கால் வயிற்றுக் கூழுமில்லை” என்ற ஜீவாவின் பாடலை உணர்ச்சியோடு பாடுவார். தொ.மு.சி.ரகு நாதனின் பஞ்சம் பசியும் நாவல் நூல் நூலாக ரசிக்கப்படும். நாடகத்துறையிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சிக்கு வந்தவர் கே.பி.ஜானகியம்மாள். அப்போது கிராமப் புறங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை அம்மா கட்சி  என்றுதான் அழைப்பார்கள். அவர் செல்லாத கிராமமே இல்லை. கால் நடையாகவும், சைக்கிள், மாட்டுவண்டி என கிடைக்கும் வாகனங்க ளில் சென்று கிராமப்புறங்களில் பணியாற்றுவார். தோழர் சங்கரய்யா மண்டையன் ஆசாரி சந்து அலுவலகத்திலிருந்து பணியாற்றுவார். எங்களு டைய குடும்பத்திற்கு மட்டுமல்ல. தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு அவர் ஆதர்சமாக, வழிகாட்டியாக விளங்குகிறார்.

;