internet

img

இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி தொடர்பான 30 கோடி கருத்து பரிமாற்றங்கள் யூ.சி. பிரவுசர் சாதனை

கோயம்புத்தூர், ஜூன் 27 – இந்தியா–பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி தொடர்பான 30 கோடி கருத்துப் பரிமாற்றங்களை உரு வாக்கி யூ.சி. பிரவுசர் சாதனை படைத்துள்ளது. உலகின் நம்பர் ஒன் மூன்றாம் தரப்பு மொபைல் பிரவுசர் மற்றும் உள்ளடக்க தளமான யூ.சி. பிரவுசர், விளையாட்டு போட்டிகளை டிஜிட்டல் மயமாக்கும் தனது திட்டத்தை கிரிக்கெட் உள்ளடக்க நுகர்வு மற்றும் விளையாட்டு ஆர்வலர்களுடன் இணைந்து 2019 ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை கொண்டாடியதன் மூலம் மேற்கண்ட சாதனையை எட்டியுள்ளது.  சமீபத்தில் நடந்து முடிந்துள்ள, மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தியா–பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டி தொடர்பான 30 கோடி உள்ளடக்கங்களை (content) யூசி பிரவுசர் வழியாக கண்டுகளித்துள்ளனர். கிரிக்கெட் போட்டி தொடர்பான குறு வீடி யோக்கள், ஜிப்கள்(GIFs) மீம்ஸ்களா னது, மிகுந்த எதிர்பார்ப்பை ஏற் படுத்திய இந்த போட்டியின்போது விளையாட்டு ஆர்வலர்களுக்கு இடையே விரிவான முக்கிய ஆதார மாக இருந்தன. யூ.சி. பிரவுசரானது தனது விரிவான கவரேஜ் மூலமும், பலவித பயன்பாட்டு ஆப் நட வடிக்கை வழியாகவும் உள்ளடக்க நுகர்வோர்களை வெகுவாக கவர்ந் துள்ளது. பல்வேறு வட்டார மொழிகளில் நேரடி வர்ணனை காரணமாக யூசி பிரவுசரானது, சமீபகாலமாக விளை யாட்டு தொடர்பான உள்ளடக்கத் திற்கு மிகவும் விருப்பமான ஒன்றாக மாறியுள்ளது. அதிகாரப்பூர்வ உரிமம் பெற்ற ஆடியோ இயங்கு தளமான ஸ்போர்ட்ஸ் பிளாஸ்–வுடன் பாட்னர்ஷிப் கொண்ட பிரவுசர் யூ.சி. ஆகும். மேலும் மூடிய திரை யுடன் நேரடி ஒளிபரப்பை (பந்துக்குப் பந்து வர்ணனையுடன்) பயனாளர்கள் கேட்க உதவும் பிரவுசராகவும் இது உள்ளது. பயனாளர்கள் தங்களது மூடிய மொபைல் சாதனங்களை திறக்காமல் ஆங்கிலம், இந்தி மற்றும் வேறு இரண்டு பிராந்திய மொழிகளில் கிரிக்கெட் போட்டியின் நேரடி ஆடியோ அப்டேட்களை கேட்டு அனுபவிக்க முடியும். - https://www.youtube.com/watch?v=Z_rfdTcHNuc மேலும் முன்னாள் கிரிக்கெட் சாதனையாளர்கள் கேவின் பீட்டர்சன், மைக்கேல் கிளார்க் ஆகியோர் யூ.சி.–யின் டேப்பிங் தி பால் சேலஞ்ச் நிகழ்ச்சியில் பங்கேற்றது, வேடிக்கையான விஷயமாகவும், சமூக வலைதளங்களில் முக்கிய விவாத பொருளாகவும் அமைந்திருந் தது. நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் விளம்பர பலகையில் இடம்பெற் றுள்ள முந்தைய யூ.சி. மிஸ் கிரிக்கெட் வெற்றியாளர் சனா சுல்தான் கான், யூ.சி. மிஸ் கிரிக்கெட் ரன்னர் அப்–களில் ஒருவரான ஏஞ்சல் ராயுடன் இந்த சவாலை எதிர் கொண்டார். பயனாளர்கள் விளை யாட்டை தொடர்ச்சியாக பின்தொடர்வதற்கு வசதியாக, யூசி கிரிக்கெட் நினைவூட்டலையும், ஒவ்வொரு போட்டிக்கு முன்பும் அறிவிப்பையும் வழங்குகிறது.  மேலும் போட்டிகளை ரசித்துக் கொண்டிருக்கும்போது, கிரிக்கெட் ரசிகர்களுக்கு இடையே தங்களது எண்ணங்களையும், கருத்துக் களையும் கருத்துகளை பதிவிடும் பகுதி வழியாக பகிர்ந்து கொள்ள முடியும். பயனாளர்கள் தங்களது ஐடிக்களை தனிப்பயன்பாட்டுக்காக உபயோகித்துக்கொள்ளலாம். மற்ற கிரிக்கெட் ரசிகர்களுடன் சிறப்பான முறையில் கலந்துரையாடுவதற்கு எமோட்டிகான்களை பயன்படுத்த லாம்.

அலிபாபா குழுமத்தின் அங்கம்
மொபைல் இண்டெர்நெட் சாப்ட்வேர் மற்றும் சர்வீஸ் முக்கிய பங்களிப்பாளர்களான சீனாவின் அலிபாபா டிஜிட்டல் மீடியா மற்றும் எண்டர்டைன்மெண்ட் குழுமத்தின் ஒரு அங்கம் யூ.சி. மொபைல் மார்க்கெட்டிங்கிற்கான யூ.சி.யின் சர்வதேச தயாரிப்பு பிரிவில் உள்ளடக்க வினியோக தளமான யூ.சி. பிரவுசர், ஆண்ட்ராய்டு ஆப்  ஸ்டோர், 9 ஆப்ஸ், யூ.சி. ஆட்  போன்றவை அடங்கும். மேலும் ஸ்டாட்கவுண்டரின் புள்ளிவிபரப்படி உலகின் நம்பர் ஒன் மூன்றாம் தரப்பு மொபைல் பிரவுசர், யூ.சி.  பிரவுசராகும். இது உலகளவில் 430 மில்லியன் மாதாந்திர பயன்பாட்டா ளர்களை கொண்டது. யூ.சி. தொடர் பான கூடுதல் விபரங்களையும் அதன் செயல்பாடுகளையும் www.ucweb.com இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளது.