internet

img

கூகுள் மேப்ஸில் புதிய அம்சம் அறிமுகம்

வாகனங்களில் செல்லும் போது தவறான பாதையில் சென்றால், அதற்கு மாற்று வழி காண்பிக்கும் சேவைக்கு பதிலாக எச்சரிக்கை விடுக்கும் அம்சத்தை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. 

கூகுள் மேப்ஸ் பயன்படுத்தி நாம் செல்ல வேண்டிய இடத்தின் பாதையை நாம் அறிந்து கொள்ள முடியும். சில சமயங்களில், நாம் வழி தவறி வேறு வழியில் செல்வது உண்டு. அச்சமயங்களில் கூகுள் மேப்ஸ், நாம் செல்ல வேண்டிய இடத்திற்கான மாற்று வழியை காட்டும். ஆனால், அண்மைக்காலமாக இது போல் கேப்களில் மாற்று வழியில் செல்வதால், நகைப்பறிப்பு, பாலியல் வன்கொடுமை என பல்வேறு குற்றச்செயல்களில் நடைபெறுகிறது. 

இந்த நிலையில், தற்போது பயனர்களின் பாதுகாப்பை கருதி கூகுள் நிறுவனம் தன்னுடைய கூகுள் மேப்பில் புதிய வசதியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, வாகனங்களில் செல்லும் போது ஒரு வேளை தவறான வழியில் செல்ல நேர்ந்தால், இனி மாற்று வழியை கூகுள் மேப் காட்டாது. அதற்குப் பதிலாக ‘நீங்கள் தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறீர்கள்’ என்று பயனர்களுக்கு எச்சரிக்கை செய்து விடும். 

கூகுள் மேப்ஸ் காட்டும் பாதையிலிருந்து 500மீ தொலைவில் வேறு வழியில் சென்று விட்டால் இந்த எச்சரிக்கை அலர்ட் கொடுத்துவிடும். இந்த வசதி தற்போது சோதனை முறையில் செய்யப்பட்டு வருகிறது. இந்த அம்சம் விரைவில் அப்டேட் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.