internet

img

செய்திகள் மூலம் கூகுள் நிறுவனத்துக்கு 4.7 பில்லியன் டாலர் வருவாய்

கடந்த 2018-ஆம் ஆண்டில், செய்திகள் மூலம் கூகுள் நிறுவனம் 4.7 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இணையத்தில் எதை தேடுவதாக இருந்தாலும், நாம் முதலில் தேடி செல்வது கூகுளைத் தான். கூகுள் மூலமாகவே நாம் வேறு இணையதள பக்கத்தை அடைகிறோம். அப்படி கூகுளில் நாம் தேடும் ஒவ்வொரு தேடலும் அந்த நிறுவனத்துக்கு லாபத்தை தருகிறது. 

இந்நிலையில், கூகுள் நிறுவனம் கடந்த 2018-ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் மொத்தமாக 39.3 பில்லியன் டாலர் வருவாயை ஈட்டியுள்ளது. இது அதற்கு முந்தைய வருடம், விட 22 சதவீதம் அதிகம். இதில், கூகுள் நிறுவனம் செய்திகள் மூலம் 4.7 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இணையத்தில் உள்ள செய்தி நிறுவனங்களில் செய்திகளை நாம் தேடி தேடி படிப்பதன் மூலம் கூகுளுக்கு இவ்வளவு லாபம் கிடைத்துள்ளது.

இது குறித்து அமெரிக்காவின் என் எம் ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவின் மொத்த செய்தி துறையின் வருவாய் ரூ.5.1 பில்லியன் டாலர்கள். அதில் கூகுள் பங்கு மட்டும் 4.7 பில்லியன் டாலர்கள். கூகுளில் பயனாளர்கள் செய்யும் தேடலில் 40 சதவிகிதம் செய்திகளை பற்றியது தான். செய்தி நிறுவனங்களால் கூகுள் அதிக லாபம் அடைகின்றன. ஆனால் அந்த லாபத்தில் செய்தி நிறுவனத்துக்கும், செய்திகளை எழுதும் பத்திரிகையாளர்களுக்கும் துளியும் பங்கு இல்லை. இந்த முரண்பாடு கவலையளிக்கிறது என்று தெரிவித்துள்ளார். 
 

;