internet

img

கணினிக்கதிர் : கணினித் திரையை பதிவு செய்யவும், பகிர்ந்துகொள்ளவும் உதவும் மென்பொருள்கள்

ஸ்கிரீன் ரெக்கார்டர் மென்பொருள்கள்
கணினித்திரையில் நம்முடைய செயல்பாடுகளைப் பதிவு செய்து மற்றவர்களுக்கு விளக்கவும், தொழில்நுட்ப நுணுக்கங்களை அறியாதவர்களுக்கு கற்றுக் கொடுக்கவும் உதவும்  வகையில் மென்பொருள்கள் பல உள்ளன.
ஓப்பன் பிராட்காஸ்டிங் மென்பொருள் (https://obsproject.com/) திரைக்காட்சியை 1080p HD தரத்துடன் படம்பிடிக்க உதவுகிறது. நேரம் தடையில்லை. எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பதிவு செய்யலாம். ஓப்பன் சோர்ஸ் முறையில் உருவாக்கப்பட்டது. விண்டோஸ் 64 பிட், 32 பிட், லினக்ஸ், மேக் உள்ளிட்ட இயங்குதளங்களில் பயன்படுத்த முடியும். இத்தனை சிறப்புகள் கொண்ட இம்மென்பொருள் முற்றிலும் இலவசமானது என்பது கூடுதல் தகவல்.
இதற்கு இணையான வசதிகள் கொண்டு மற்றொரு மென்பொருள் ஐஸ்கிரீம் ஸ்கிரீன் ரெக்கார்டர் (https://icecreamapps.com/Screen-Recorder/) என்பதாகும். இது பல வசதிகளை வழங்கினாலும் 5 நிமிடம் வரையிலான பதிவுகளை மட்டுமே இலவசமாக வழங்குகிறது. அதிக வசதிகளுக்கு சுமார் 30 டாலர் கட்டணம் செலுத்த வேண்டும்.

மேற்கூறிய மென்பொருள்கள் அளவிற்கு சிறப்பாக இல்லாவிட்டாலும், எளிமையான வசதிகளுடன் ஓப்பன் சோர்ஸ் முறையில் இலவசமாகக் கிடைக்கும் மற்றொரு சிறந்த மென்பொருள் கேம்ஸ்டுடியோ (https://camstudio.org/)
கணினித் திரையை பதிவு செய்வதுடன், வீடியோ எடிட் செய்யவும், குரல் பதிவு, இசை சேர்ப்பு, காட்சி வேகத்தை தேவைக்கேற்ப குறைத்தல், கூட்டுதல், ஸ்லைட்ஷோக்களை உருவாக்குதல், யுடியூப் போன்ற ஆன்லைன் தளங்களுக்கு அப்லோட் செய்யவும் உதவுதல் என பல்வேறு பணிகளையும் செய்யக்கூடியது இஇசட்விட் (https://www.ezvid.com/ezvid_for_windows) என்ற மென்பொருள்.

கணினித் திரையை படமெடுத்தல்
விண்டோஸ் கணினியில் இருக்கும் பிரிண்ட் ஸ்கிரீன் வசதியைத் தவிர்த்து கூடுதல் வசதிகள் தரும் தனிப்பயன் மென்பொருள்கள் சில உள்ளன. மைக்ரோசாப்ட் நிறுவனம் Snip & Sketch என்ற மென்பொருளை இலவசமாக வழங்குகிறது. விண்டோஸ் 10 இயங்குதளம் பயன்படுத்துபவர்கள் இதனை https://www.microsoft.com/en-us/p/snip-sketch/9mz95kl8mr0l?activetab=pivot:regionofsystemrequirementstab என்ற தளத்திலிருந்து பதிவிறக்கி பயன்படுத்தலாம். இந்த மென்பொருள் மூலம் முழுத்திரையையோ அல்லது குறிப்பிட்ட பகுதியை தேர்வு செய்தோ படம் பிடிக்கலாம். Win + Shift + S கீகளை ஒன்றாக அழுத்துவதன் மூலம் இந்த மென்பொருளை செயல்பாட்டிற்கு கொண்டுவரலாம்.லைட்ஷாட் (Light Shot) என்ற மென்பொருளும் மேற்கண்ட வசதிகளைத் தருகிறது. இதனை பதிவிறக்க  https://app.prntscr.com/en/index.html கிரீன்ஷாட் என்ற ஓப்பன் சோர்ஸ் வகை மென்பொருளும் அதிகப் பயன்பாட்டில் உள்ளது. இதனைப் பதிவிறக்க https://getgreenshot.org/

கணினித் திரையை பகிர்தல்
கணினித் திரையைப் பகிரும் டீம்வியூவர், எனிடெஸ்க் போன்ற மென்பொருள்களைப் பயன்படுத்துவது தொடர்பாக பல வங்கிகள், ஆன்லைன் பணப் பரிவர்த்தனை நிறுவனங்கள் தரப்பிலிருந்து எச்சரிக்கை அறிவிப்புகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், கணினிகள் ஏற்படும் தொழில்நுட்ப பிரச்சனைகளை உடனடியாக சரிசெய்யவும், ஆன்லைன் வகுப்பறை செயல்பாடு, ஆன்லைன் கலந்துரையாடல் எனப் பல முக்கியப் பணிகளுக்கு இந்த மென்பொருள்கள் மிகவும் உதவிகரமாக இருக்கின்றன என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது. இந்த மென்பொருள்களை நாம் முற்றிலும் தவிர்க்கமுடியாது, அதே நேரத்தில் இவற்றில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை சரியாக உணர்ந்து விழிப்புணர்வுடன் செயல்படவேண்டியதும் அவசியமாகும்.  

நாம் முன்பே அறிந்த டீம் வியூவர், எனி டெஸ்க் மென்பொருள்கள் தவிர்த்து இதே போன்ற சேவையை வழங்கும் வேறு சில மென்பொருள்களும் பயன்பாட்டில் உள்ளன. கூகுள் குரோம் ரிமோட் டெஸ்க்டாப் : இது நாம் வழக்கமாகப் பயன்படுத்தும் குரோம் பிரௌசரில் இணைத்துப் பயன்படுத்தக்கூடிய ஒரு எக்ஸ்டென்ஷன் மென்பொருளாகும். குரோம் பிரௌசர் திறந்து அதில் https://remotedesktop.google.com என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, குரோம் பிரௌசருடன் இணைக்கவேண்டும். இதனை பதிவிறக்க கூகுள் கணக்கில் பதிவு செய்யவேண்டும். இணைத்த பிறகு பின் எண் செட் செய்து கொண்டு பயன்படுத்தலாம். ரிமோட் பிசி : இது கட்டண மென்பொருள். இருப்பினும் அடிப்படை வசதிகளான வரம்பற்ற மற்றும் நேரடித் திரைப் பகிர்வும், ஒரு கணினி மூலமாக மட்டுமே அணுகிப் பார்க்கும் வசதியையும் தருகிறது. ஃபல்களைப் பகிர்தல், ரிமோட் பிரிண்டிங், வொய்ட்போர்டு உள்ளிட்ட வசதிகள் தேவையெனில் கட்டணம் செலுத்தவேண்டும்.

===என்.ராஜேந்திரன்===

;