internet

img

பாட்டில் கேப் சேலஞ்ச்சை அடுத்து இணையதளத்தில் ட்ரெண்டாகும் நெய்பர் சேலஞ்ச்!

ஐஸ் பக்கெட், கிகி, பாட்டில் கேப் போன்ற சவால்களை அடுத்து தற்போது ‘நெய்பர் சேலஞ்ச்' என்ற புதிய சவால் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

அது என்ன 'நெய்பர் சேலஞ்ச்' என்று பார்ப்போம். ஒருவருடைய மொபைல் எண்ணின் கடைசி எண்ணை, அதற்கு முந்தைய அல்லது பிந்தைய எண்ணாக மாற்றி, அந்த எண்ணுக்கு ’ஹாய்’ என்று மெசேஜ் அனுப்ப வேண்டும். இதற்கு அந்த முகம் தெரியாத நபர் அளித்த பதில்களை அப்படியே ஸ்கிரீன்ஷாட் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட வேண்டும்.  சில பதில்கள் ஆர்வத்தை தூண்டும் வகையிலும் சில பதிவுகள் காரசாரமாகவும் இருக்கின்றன. 

இந்த 'நெய்பர் சேலஞ்ச்' மூலம் சிலர் நண்பர்கள் ஆகி விட்டாலும் பலருக்கு மோசமான பதில்கள் தான் பரிசாக கிடைக்கின்றது. அதே சமயம் குறுஞ்செய்தி அனுப்பியவர் பெண் என்றால் இணையர்கள் எல்லை மீறுவதாக பலர் குற்றம் சாட்டி வருகின்றனர். விமர்சனங்கள் எழுந்தாலும் உலகம் முழுவதும் 'நெய்பர் சேலஞ்ச்' சவால் தான் ட்ரெண்டாகி வருகிறது. 
 

;