internet

img

2019 ஆப்பிள் டெவலப்பர் நிகழ்வில் எதிர்பார்க்கப்படும் முக்கிய அறிவிப்புகள்

ஆப்பிள் நிறுவனத்தின் 2019-ஆம் ஆண்டின் டெவலப்பர்கள் நிகழ்வில், முக்கிய அறிவிப்புகள் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்பிள் நிறுவனத்தின் 2019-ஆம் ஆண்டின் சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வு (WWDC 2019), வரும் ஜூன் 3-ஆம் தேதி அன்று துவங்கி, ஜூன் 7-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கீநோட் உரையுடன் துவங்கும் சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வு கலிபோர்னியாவின் சான்ஜோசில் உள்ள மெக் எனர்ஜி கன்வெஷன் சென்டரில் நடைபெறுகிறது. இந்நிகழ்வில் ஆப்பிள் மென்பொருள் சார்ந்த முக்கிய அறிவிப்புகளை வெளியிடலாம் என தெரிகிறது.

ஆப்பிள் நிறுவனம் ஐ.ஓ.எஸ். 13, மேக் ஓ.எஸ். 10.15 மற்றும் வாட்ச் ஓ.எஸ். 6 உள்ளிட்ட இயங்குதளங்கள் பற்றி அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஐ.ஓ.எஸ். 13 இயங்குதளம் யுகான் என்ற குறியீட்டு பெயரில் உருவாகி வருவதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருக்கிறது. இதில் பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்பட இருக்கிறது.

அந்த வகையில் ஐ.ஓ.எஸ். 13 இல் டார்க் மோட், யு.ஐ. ட்வீக்கள், புதிய அனிமேஷன்கள் மற்றும் அதிகாரப்பூர்வ கீபோர்டில் ஸ்வைப் டைப்பிங் வசதி உள்ளிட்டவை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை அடுத்து, மேக் ஓ.எஸ். 10.15 தளத்தில் ஐபேட் செயலிகளை இயக்கும் வசதியும் பாட்கேஸ்ட் போன்ற ஐபேட் செயலிகளுக்கு மேக் ஓ.எஸ். வெர்ஷன் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

இத்துடன் மேக் சாதனங்களுக்கென ஆப்பிள் நிறுவனம் புதிதாக ஆப்பிள் மியூசிக் செயலியை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இது ஐடியூன்ஸ் போன்றே செயல்படும் என தெரிகிறது. இத்துடன் மேம்பட்ட மேக் ப்ரோ சார்ந்த அறிவிப்பும் இந்நிகழ்வில் எதிர்பார்க்கப்படுகிறது.

இதை தொடர்ந்து, வாட்ச் ஓ.எஸ். 6 தளத்தில் ஆப் ஸ்டோர் வசதி சேர்க்கப்படலாம் என கூறப்படுகிறது. இத்துடன் வாய்ஸ் மெமோஸ் செயலி, அனிமோஜிக்கள், மெமோஜி வசதி, ஆப்பிள் புக்ஸ் செயலி மற்றும் உடல்நலம் சார்ந்த புதிய செயலிகள் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.