internet

img

கூகுளை தொடர்ந்து ஆப்பிள் ஐகிளவுட் சேவையில் பாதிப்பு

கூகுள் மற்றும் ஃபேஸ்புக் நிறுவன சேவைகளில் சமீபத்தில் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், தற்சமயம் ஆப்பிள் ஐகிளவுட் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த பாதிப்பு ஆப்பிள் ஐகிளவுட் மற்றும் இதர சேவைகளை பயன்படுத்த முடியாத நிலையை ஏற்படுத்தியது. பிரச்சனை சரிசெய்யப்பட்டு விட்ட நிலையில், ஐகிளவுட் கேலெண்டர், காண்டாக்ட் மற்றும் ரிமைண்டர் போன்ற சேவைகள் சரியாக நீண்ட நேரம் ஆனது.

ஆப்பிள் சேவைகளில் பாதிப்பு ஏற்பட துவங்கியதும், பயனர்கள் தங்களது பிரச்சனைகளை ட்விட்டரில் தெரிவிக்க துவங்கினர். எனினும், ஆப்பிள் சார்பில் பிரச்சனை பற்றி எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. 

இதுகுறித்து வெளியான தகவல்களில் அமெரிக்கா முழுக்க ஆப்பிள் சேவைகள் முடங்கியுள்ளதாக ஆப்பிள் ஸ்டோர் அதிகாரி தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது. மற்ற ஆப்பிள் சேவைகளான ஆப்பிள் பே, ஃபைண்ட் மை ஃபிரண்ட்ஸ் மற்றும் ஃபைண்ட் மை போன் உள்ளிட்டவையும் பாதிக்கப்பட்டன. முன்னதாக ஃபேஸ்புக் நிறுவன சேவைகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பயனர்கள் சேவைகளை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

கடந்த வாரம் கூகுளின் காலெண்டர் சேவை சுமார் மூன்று மணி நேரத்திற்கு இயங்காமல் போனது. உலகம் முழுக்க பாதிக்கப்பட்ட இந்த சேவை பின் சரி செய்யப்பட்டது.
 

;