ட்விட்டர் பயனர்கள் நாள் ஒன்றுக்கு எத்தனை பேரை பின்தொடர வேண்டும் என்ற எண்ணிக்கையில் மாற்றம் செய்திருக்கிறது.
ட்விட்டர் நிறுவனம் சமீபத்தில், பல்வேறு மாற்றங்களை கொண்டுவந்து உள்ளது. இந்நிலையில், ஸ்பாம் மற்றும் ரோபோட் பயன்பாடுகளை தடுக்கும் நோக்கில், ட்விட்டர் பயனர்கள் அதிகபட்சமாக நாள் ஒன்றுக்கு 400 பேரை மட்டுமே பின்தொடர முடியும். இதற்கு முன்னதாக நாள் ஒன்றுக்கு 1000 பேரை பின்தொடரும் வசதி வழங்கப்பட்டு இருந்தது.
இந்த மாற்றம் வெரிஃபைடு இல்லாத பயனர்களுக்கு மட்டுமே, வெரிஃபைடு அக்கவுண்ட் வைத்திருப்போர் தினமும் 1000 பேரை பின்தொடரலாம்.