2019-ஆம் ஆண்டுக்கான கூகுள் பிளே விருதுகள், சிறந்த ஆப், கேம்ஸ், இ-புக்ஸ், மூவீஸ் மற்றும் ஆடியோ புத்தகங்கள் ஆகியவற்றை தேர்வு செய்து, கூகுள் நிறுவனம் விருது வழங்கியுள்ளது.
ஆண்டுதோறும், கூகுள் பிளே விருதுகளை கூகுள் நிறுவனம் வழங்கி வருகிறது. இந்நிலை இந்த ஆண்டுக்கான கூகுள் பிளேயில் அதிக விற்பனையாகும் படங்களில் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் முதலிடத்தை பிடித்துள்ளது. அடுத்ததாக அக்வாமேனும், எ ஸ்டார் இஸ் பார்னும் இடம்பிடித்துள்ளது. 4வது இடத்தை கேப்டன் மார்வெலும், 5வது இடத்தை ஸ்பைடர் மேன் இன் டு தி ஸ்பைடர் வெர்ஸ் படமும் பிடித்துள்ளன. இதில் அனிமேஷன் படமான ஸ்பைடர் மேன் இன் டு தி ஸ்பைடர் வெர்ஸ் குழந்தைகளை அதிகம் கவர்ந்த படமாக உள்ளது.
இதில் பயனர்கள் தேர்வு என்ற விருதை கிளிச் வீடியோ எஃபெக்ட் என்ற செயலி, ’ஸ்கேரி ஸ்டோரீஸ் டூ டெல் இன் தி டார்க்’ என்ற இ-புக்கதம், அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் ஆகியவற்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த செயலிக்கான விருதை அப்லொ (Ablo) பெற்றுள்ளது. இந்த ஆப் மூலம் வீடியோ கால் செய்வதோடு, வேறு மொழிகாரர்களுடன் பேசினால் அவர்கள் பேசுவதை நமக்கு தெரிந்த மொழியில் மொழிபெயர்ப்பையும் செய்துவிடும். சிறந்த கேம்க்கான விருதுக்கு கால் ஆஃப் ட்யூடி(call of duty) தேர்வு செய்யப்பட்டது.