தமிழிசை சௌந்தர்ராஜன், ஒரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தின் ஆளுநராக இருந்தாலும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தனது திறமையை நிரூபிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. நினைவில் கொள்ளுங்கள், தமிழிசை சௌந்தர்ராஜன் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்.
மாநிலங்களவை உறுப்பினரும், ஒன்றிய அமைச்சருமான எல்.முருகன் ஊட்டியில் களமிறக்கப்பட்டு மக்கள் மத்தியில் அலைக்கழிக்கப்படுகிறார். எல்.முருகன் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதை நினைவில் கொள்வோம்.
ஒரு சிட்டிங் எம்.எல்.ஏ. ஆக இருந்த நைனார் நாகேந்திரன் வாடும் வெயிலில் வியர்வை சிந்தி தேர்தலில் போராட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, அவர் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்.
ஆனால், ஒன்றிய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் மற்றும் ஜெய்சங்கர் ஆகியோர் எந்த கடினமான உழைப்புமின்றி எம்.பி.க்களாக தொடரவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், துரதிர்ஷ்டவசமாக பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அவர்களுக்கு மிக முக்கியமான இலாகாக்கள் வழங்கப்படும். அவர்கள் இருவரும் உயர்சாதி பிராமணர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
பா.ஜ.க., உயர் சாதி மற்றும் தாழ்த்த சாதி என்ற பாகுபாடு காட்டவில்லை என்றால், திருச்சியில் நிர்மலா சீதாராமனையும், தென் சென்னையில் ஜெய்சங்கரையும் தேர்தலில் போட்டியிட நிறுத்தட்டும்.
பாஜக எந்த நிலைப்பாட்டில் இருக்கிறது என்பதை இதற்கு மேலும் சொல்ல வேண்டுமா?
- ஜி.சுந்தர்ராஜன், பூவுலகின் நண்பர்கள்