இந்தியாவின் 4ஜி இணைய வேகம் குறித்து மொபைல் நெட்வர்க்களில் செயல்திறனை ஆய்வு செய்யும் ஓபன் சிக்னல் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தியாவில், ஸ்மார்ட் போன்களுக்கான 4ஜி இணைய வசதி கடந்த 2012-ஆம் அண்டு வழங்கப்பட்டது. இந்த 4ஜி சேவை மூலம் தெளிவாக வீடியோக்கள் காண முடியும். இந்நிலையில் இந்தியாவில் 4ஜி இணைய வேகம் குறித்து ஓபன் சிக்னல் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த தகவலின்படி, கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் இணைய வேகம் அதிகமாக உள்ளது என ஓபன் சிக்னல் தகவல் தெரிவித்துள்ளது. திருவனந்தபுரத்தில் 5.8 விநாடிகளில் வீடியோ லோடு ஆகிவிடும். எனவே இந்தியாவில் அதிவேக இணைய சேவை, திருவனந்தபுரத்தில் கிடைக்கிறது என்று ஓபன் சிக்னல் தெரிவித்துள்ளது.
இதை அடுத்து இணைய வேகத்தில் இரண்டாவதாக சென்னையில் 6.0 விநாடிகளில் வீடியோ லோடு ஆகிவிடுகிறது. மூன்றாவதாக ஸ்ரீநகரில் 6.1 விநாடிகளில் வீடியோ லோடு ஆகிவிடுகிறது என்று தெரிவித்துள்ளது. இதேபோல் வடோதராவில் 6.2 விநாடிகளில் வீடியோ லோடு ஆகிவிடுவதாகவும், ஐதராபாத்தில் 6.2 விநாடிகளில் வீடியோ லோடு ஆகிவிடுவதாகவும் ஓபன் சிக்னல் தகவல் தெரிவித்துள்ளது.