வரும் ஜனவரி 14-ஆம் தேதியோடு, விண்டோஸ் 7 இயங்குதளத்தை முடிவுக்குக் கொண்டு வருவதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
உலக அளவில் கணினிகள் மற்றும் லேப்டாப்களில் தற்போது பெரிய அளவில் பயன்பாட்டில் உள்ள இயங்குதளம் ’வின்டோஸ் 7’ ஆகும். இந்த நிலையில், விண்டோஸ் 10 பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில், விண்டோஸ் 7 இயங்குதளத்தை முடிவுக்குக் கொண்டு வருவதாக மைக்ரோசாஃப்ட் அறிவித்துள்ளது. எனவே, விண்டோஸ் 7 பயன்பாட்டை வரும் ஜனவரி 14-ஆம் தேதியோடு முடிவுக்குக் கொண்டு வருகிறது. அதன் பின்னர், விண்டோஸ் 7 இயங்குதளத்துக்கான திருத்தங்கள் வழங்கப்படாது என்றும் அறிவித்துள்ளது. மேலும், விண்டோஸ் 7 உரிமம் உள்ள பயனர்கள், தற்போது தங்கள் கணினியை இலவசமாக விண்டோஸ் 10 இயங்குதளத்துக்கு மாற்றி கொள்ளும் வசதியையும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வழங்கி உள்ளது.