internet

img

மெட்டா நிறுவனத்திற்கு எலான் மஸ்க் எச்சரிக்கை!

மெட்டா நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப்போவதாக என டிவிட்டர் நிறுவனர் எலான் மஸ்க் எச்சரித்துள்ளார்.
டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கிய பிறகு, டிவிட்டர் பயனாளர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து, அதிகாரப்பூர்வ கணக்குகளுக்கு கட்டணங்கள் விதித்தது என டிவிட்டர் நிறுவனம் பல்வேறு விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில், மெட்டா நிறுவனம் த்ரெட்ஸ் என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியது. இன்ஸ்டாகிராம் கணக்கை பயன்படுத்தி த்ரெட்ஸ் செயலியை பயன்படுத்தலாம் என்று மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
டிவிட்டரை போன்று த்ரெட்ஸில் பயனர்கள் தங்கள் கருத்துகளையும், புகைப்படங்களும், 5 நிமிடங்கள் விடியோக்களையும் பதிவு செய்ய முடியும். பிற கணக்குகளையும் பின்தொடர முடியும். இந்த செயலியை அறிமுகமான முதல் நாளிலேயே 3 கோடி பயனர்கள் இணைந்துள்ளனர்.
இந்நிலையில், டிவிட்டரை போலவே பிரதியாக த்ரெட்ஸ் இருப்பதாக கூறி மெட்டா நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப்போவதாக எலான் மஸ்க் எச்சரித்துள்ளார்.
 

;