இந்தியாவில் கம்ப்யூட்டர்களுக்கென பிரத்யேக பப்ஜி வெர்ஷனான பப்ஜி லைட் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக டென்சென்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
டென்சென்ட் நிறுவனம் பப்ஜி லைட் குறித்து புதிய அறிவிப்பை இன்று தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில், குறைவான சிறப்பம்சங்கள் கொண்ட கணினிகளில் இயங்கும் வகையில் பப்ஜி கேமின் லைட் வெர்ஷன் உருவாக்கப்படுகிறது. விரைவில் பப்ஜி லைட் வெர்ஷன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. இதனை பப்ஜி லைட் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த மாதத்தின் இறுதிக்குள் இந்த பப்ஜி லைட் வெர்ஷன் வெளியிடப்படும் என்று டென்சென்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்சமயம் இந்த கேம் உலகம் முழுக்க 15 நாடுகளில் வெளியிடப்பட இருக்கிறது. இந்தியாவில், வரும் ஜூன் 25-ஆம் தேதி இந்த லைட் வெர்ஷன் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கம்ப்யூட்டரில் பப்ஜி லைட் விளையாட, விண்டோஸ் 7, 8, அல்லது 10 (64பிட்) ஆகிய இயங்குதளத்தில் இயங்கும். மேலும், இன்டெல் கோர் ஐ3, 2.4 ஜிகாஹெர்ட்ஸ், 4 ஜி.பி. ராம், இன்டெல் ஹெச்.டி. கிராஃபிக்ஸ் 4000 மற்றும் 4 ஜி.பி. மெமரி ஆகிய கான்ஃபிக்ரேஷன் இருக்க வேண்டும்.