india

img

புனே ரசாயன ஆலை தீ விபத்தில் 15 பெண்கள் உட்பட 18 பேர் பலி....

புனே
 மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் ரசாயன ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 15 பெண்கள் உள்பட 18 பேர் கருகி பலியாகினர்.

புனே மாவட்டத்திலுள்ள பிராங்குட் பகுதியில்  எஸ்விஎஸ் அக்வா டெக்னாலஜி என்ற பெயரில் ரசாயன உற்பத்தி ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் ரசாயனம் பேக்கிங் பிரிவில் பெண்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த ஆலையில் ஜூன் 7 அன்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ ரசாயனத்துடன் கலந்து வேகமாக பரவியதால், அங்கு பணியில் இருந்த பெண் ஊழியர்கள் வெளியேற முடியாமல் தவித்தனர்.  தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த பயங்கர தீவிபத்தில், 15 பெண்கள் உட்பட 18 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். ரசாயனத்தோடு, உயிரிழந்தவர்களின் உடல்களும் எரிந்துள்ளதால், அவர்களின் உடல்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு கருகி உள்ளதாக கூறப்படுகிறது. விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உயிரிழந்த வர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து தலா 2 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என கூறியுள்ளார்.மகாராஷ்டிர அரசு சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தின ருக்கு தலா 5 லட்ச ரூபாய் இழப்பீடுவழங்கப்படும் என துணை முதல்வர்அஜித் பவார் அறிவித்துள்ளார். மேலும் இந்த தீ விபத்து குறித்துஉரிய விசாரணைக்கு உத்தர விடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

;