india

img

ஒரே பெண்ணுக்கு 3 டோஸ் தடுப்பூசிகள்... விசாரணைக்கு உத்தரவு.....

தானே:
ஒரே பெண்ணுக்கு 3 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது  குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மராட்டிய மாநிலம் தானே மாநகராட்சி  ஊழியர் ஒருவரின் மனைவி ஆனந்த்நகரில் உள்ள ஒரு தடுப்பூசி மையத்தில் தடுப்பூசி போடச் சென்றார். அங்கு அவருக்கு சில நிமிடங்களில் 3 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர்  தனது கணவரிடம் தெரிவித்துள்ளார்.  பின்னர்அவரது கணவர் உள்ளூர் அதிகாரியிடம்  கூறியுள்ளார். 

இதைத் தொடர்ந்து, அந்த பெண்ணின் ஆரோக்கியம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அந்தப் பெண், தனது கணவர் மாநகராட்சியில் பணிபுரிவதால் புகார் எதுவும் அளிக்க விரும்பவில்லை என்று கூறினார்.மருத்துவர்கள்  குழு பாதிக்கப்பட்டவரின் வீட்டிற்குச் சென்று அவரை கண்காணித்து வருகிறது. அவர் நல்ல உடல்நிலையுடன் உள்ளார். இது குறித்து விசாரணை நடத்த  ஒரு குழுவை அமைத்துள்ளோம் என்று  மாநகராட்சி  மருத்துவ சுகாதார அதிகாரி டாக்டர் குஷ்பூ தவ்ரே கூறினார்.தானே மேயர் நரேஷ் மஸ்கே கூறுகையில், இந்த சம்பவம் குறித்து மாநகராட்சி அதிகாரிகள் இப்போது விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகள் எனக் கண்டறியப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

;