india

img

ஜிடிபி-யில் 35 சதவிகிதம் பங்களிக்கும் தென்மாநிலங்களை மோடி அரசு தண்டிப்பது ஏன்?

புதுதில்லி,டிச.7- நாட்டின் பொருளாதாரம் சமூகத்திற் கானது, மக்களுக்கானது என்பதை ஒன்றிய அரசு புரிந்து கொள்ள வேண் டும் என்று ஜான் பிரிட்டாஸ் எம்.பி. கூறியுள்ளார்.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், மாநிலங்களவையில் அவ சரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை எழுப்பும் நேரத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் பேசியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: 

போட் கிளப் மைதானத்தில் பாலும் தேனும் ஓடுகிறது..
மாண்புமிகு உறுப்பினர்கள் ராகேஷ் சின்கா மற்றும் பலரின் பேச்சுக்களுக்குப்பின் ஓர் அதிசயம் நடந்திருக்கிறது. நான், புதுதில்லியில் உள்ள தெற்கு அவென்யுவிலிருந்து வந்துகொண்டிருந்தபோது, போட் கிளப் மைதானத்தில் சில மாற்றங்கள் நடந்திருக்கின்றன. தண்ணீருக்குப் பதிலாக, அதில் பாலும் தேனும் ஓடு கிறது. 2014-க்குப்பின், இந்த நாடு மிக வும் கடுமையாக மாறியிருக்கிறது. எப்படி இந்த மாற்றங்கள் ஏற்பட்டன  என்று உங்களுக்குத் தெரியும். இது தொடர்பான அட்டவணைகள் அனை த்தும் இங்கே தரப்பட்டிருக்கின்றன. எனவே அவற்றுக்குள் நான் செல்ல வில்லை.

நிதியமைச்சர் விளக்கிய மாநிலங்களுக்கான கடன்வரம்பு
எனினும் எங்கள் கேரள மாநிலம் குறித்து உள்ள சில பிரச்சனைகள் சம்பந்தமாகப் பேச விரும்புகிறேன். நிதி  அமைச்சர் அவர்களிடம் மாநிலங்கள் கடன் வாங்கும் உச்சபட்ச வரம்பு குறித்து ஒரு கேள்வி கேட்டிருந்தேன். அதற்கு அமைச்சரிடமிருந்து பதில் வந்திருந்தது. அவர், 15-ஆவது நிதி ஆணையத்தின் பரிந்துரைகளின்படி, மாநிலங்களின் கடன்களின் உச்சவரம்பு குறித்து கடுமையாக இருப்பதாகக் கூறியிருந்தார்.  அந்தப் பரிந்துரைகள் என்ன? என்று அவரிடம் நான் கேட்டேன். அது கீழ்வருமாறு அமைந்திருக்கிறது:

“அரசாங்கங்கள், அனைத்து அடுக்குகளிலும், பட்ஜெட்டுக்குப் புறம் பான பரிவர்த்தனைகளில் கூடுதல் தொகை சேர்க்கப்படுவதற்கு அனுமதி அளித்திடாது தவிர்ப்பதன் மூலம் கடு மையான ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தி டலாம்” (“Governments at all tiers may observe strict discipline by resisting any further additions to  the stock of off-budget transactions”).

அரசாங்கம் என்ற வகைப்பாட்டில் ஒன்றிய அரசாங்கம் வராதா?
இது முற்றிலும் சரி தான். ஆனால், நான் கேட்க விரும்புவது, ஒன்றிய அரசாங்கம்  என்பது  மேலே  கூறிய அரசாங்கத்தின் கீழ்  வராதா?  அது, 15ஆவது நிதி ஆணையம் கூறியுள்ள அரசாங்கங்களின் ஓர்  அங்கம் இல்லையா? ஒன்றிய அர சாங்கமானது, மாநில அரசாங்கங்கள் தங்களுடைய கடன் வாங்கும் உச்ச வரம்பைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பும் போது, இந்த வரையறை ஒன்றிய அரசாங்கத்திற்குப் பொருந்தாதா? என்பதுதான்.

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கடன்கள் தொடர்பாக ஒரு கேள்வி கேட்டிருந்தேன். அது 3.4  லட்சம் கோடி ரூபாய் என்று கூறினால் நீங்கள் ஆச்சர்யத்திற்கு உள்ளா வீர்கள். இதேபோன்று வேறு சில முகமை களும் இருக்கின்றன. ஆனால் ஒன்றிய அரசாங்கம் மாநில அரசாங்கங்கள் மட்டும் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.

ரூ. 157 லட்சம் கோடி  கடனுக்கு என்ன பதில்?
ஒன்றிய அரசாங்கத்தின் மொத்த கடன் எவ்வளவு தெரியுமா? 157 லட்சம் கோடி ரூபாய்களாகும். இவ்வளவு பெரிய தொகையைக் கடன் பெற்றி ருக்கும் இவர்கள்தான் மாநில அரசாங்கங் களைக் குறைகூற முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நான் கேரளத்திலிருந்து வரு கிறேன். கேரளத்தின் சமூகக் குறியீடு கள், மேற்கத்திய நாடுகளுக்கு இணை யாக இருக்கின்றன. இந்தப் பொருளா தார நிலை எதைக் காட்டுகிறது? பொரு ளாதாரம் என்பது சமூகத்திற்கானது, மக்களுக்கானது. 

வடமாநிலங்களை விட சிறப்பாகவே உள்ளோம்

கேரள மாநிலத்தவரின் சராசரி  ஆயுள்காலம், வட மாநிலங்களில் உள்ள நபர்களின் ஆயுள்காலத்தை விட 12 ஆண்டுகள் அதிகமாகும். தென்னிந் தியா, நாட்டின் மொத்த மக்கள் தொகை யில் 18 விழுக்காட்டைப் பெற்றிருக் கிறது. ஆனால் நாங்கள் மொத்த  உள்நாட்டு உற்பத்தி (GDP)-யில்  35 விழுக்காடு அளவிற்குப் பங்க ளிப்பினைச் செய்துகொண்டிருக் கிறோம். ஆயினும் நாங்கள் தண்டி க்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம். சர்சார்ஜ் வரிகள் என்ற பெயரிலும் ஏராளமாகக் கறந்து கொண்டிருக் கிறீர்கள். ஆண்டுக்கு சுமார் 7 லட்சம்  கோடி ரூபாய் கறந்து கொண்டிருக் கிறீர்கள். இப்போது பிரதமர் ஒரு புதிய  முழக்கத்தை முழங்கிக் கொண்டி ருக்கிறார். கூட்டுறவுக் கூட்டாட்சி (cooperative federalism) என்பதே அது. ஆனால் இவர்கள் உண்மையில் கடைப்பிடிப்பது கூட்டுக்களவாணி கூட்டாட்சி (crony federalism) என்பதேயாகும். 

இவ்வாறு ஜான் பிரிட்டாஸ் பேசினார்.
(ந.நி.)