india

img

ஆர்எஸ்எஸ் தலைவருக்கு ‘இசட் - பிளஸ் ஏஎஸ்எல்’ பாதுகாப்பு

பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவராக இருக்கும் மோகன் பகவத்திற்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள தாக உள்துறை அமை ச்சகம் தெரிவித்துள் ளது. மோகன் பக வத்திற்கு ஏற்கனவே உயர்மட்ட பாது காப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்த கூடுதல் பாது காப்பு தொடர்பாக ஒன்றிய உள்துறை  மைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், “ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் திற்கு மத்திய தொழில்துறை பாது காப்புப் படையுடன் இசட் - பிளஸ் பாது காப்பின் கீழ், கூடுதலாக அட்வான்ஸ் செக்யூரிட்டி லைசன் (ஏஎஸ்எல்) பாது காப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளது” என அதில் கூறப்பட்டுள்ளது. 

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு அடுத்தபடியாக மோகன் பகவத்திற்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.