india

img

பாஜக எம்எல்ஏ நடத்தும் பள்ளியில் சிறுவர்களுக்கு ஆயுதப் பயிற்சி

மகாராஷ்டிராவில் பாஜக எம்.எழு.ஏ ஒருவருக்குச் சொந்தமான பள்ளியில் சிறுவர்களுக்கு துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட ஆயுதப் பயிற்சி அளிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. 

மகாராஷ்டிர மாநிலத்தின் தானேயில் மிரா சாலையில் பாஜக எம்எல்ஏ நரேந்திர மேத்தாவுக்கு சொந்தமான செவன் லெவன் அகாடமி என்ற பள்ளி உள்ளது. அந்தப் பள்ளியில் சிறுவர் மற்றும் இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளிக்கப்பட்டதாக பேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. 

இது குறித்து, பிரகாஷ் குப்தா என்பவர் பேஸ்புக்கில் சில புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அதில் மே 25-ஆம் தேதி முதல் ஜூன் 1-ஆம் தேதி வரை இந்தப் பயிற்சி வழங்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். பஜ்ரங் தளம் அமைப்பு இந்தப் பயிற்சியை அளித்துள்ளதாகவும் கூறியுள்ளார். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
 

;