india

img

சாக்கடையைக் காண பச்சை கம்பளம் விரிப்பு

பாஜக கூட்டணி ஆளும் மகாராஷ்டிராவின் தலைநகர் மும்பை யில் மழைக்கால தடுப்பு பணி  நடைபெற்று வருகிறது. சாக் கடை, கழிவுநீர் கால்வாய், வடி கால்களில் மண் அள்ளும் வேலை யை மும்பை மாநகராட்சி மேற் கொண்டு வருகிறது.

இந்நிலையில், மும்பைக்கு அருகே உள்ள வடாலா பகுதி யில் உள்ள சாக்கடையில் மண்  அள்ளும் நிகழ்வை மகா ராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே நேரடியாக ஆய்வு செய்தார். ஏக்நாத் ஷிண்டே சாக்கடையை காண வந்த பாதை யில் பச்சை கம்பளம் விரிக்கப் பட்டு இருந்தது. அந்த பச்சைக்  கம்பளத்தில் மீதே நடந்து வந்து  ஏக்நாத் ஷிண்டே சாக்கடை யில் மண் அள்ளும் நிகழ்வை  ஆய்வு செய்தார். இதுதொடர்  பான வீடியோ சமூகவலைத்தளங்  களில் வைரலாகி வரும் நிலை யில், “சாக்கடையை காணக் கூட பச்சை கம்பளமா?” என எதிர்க்  கட்சியினர், நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

யார் இந்த வேலையை பார்த்தது?

அதிகார போதையால் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே சாக்க டையைக் காண தனக்கு பச்சை  கம்பளம் விரித்துக் கொண்டாரா? இல்லை, வரவிருக்கும் சட்ட மன்ற தேர்தலில் (இந்த ஆண்டு இறுதி) சீட் வாங்குவதற்காக வேறு யாரேனும் பச்சை கம்ப ளம் விரித்தனரா? என கேள்வி கள் எழுந்துள்ளன. யார் இந்த வேலையை பார்த்தது என்பது தெரியவில்லை.
 

;