india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

திந்தோரி
தொகுதி சிபிஎம் வேட்பாளர்   ஜேபி காவிட்

மும்பை, ஏப். 27 - மகாராஷ்டிர மாநிலம் திந்தோரி மக்களவைத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப் பினர் ஜே.பி. காவிட் போட்டி யிடுகிறார். 7 முறை சட்ட மன்ற உறுப்பினராகப் பணி யாற்றியுள்ள ஜே.பி. காவிட்டை ஆதரிக்க ‘இந்தி யா’ கூட்டணி முன்வர வேண் டும் என்று கோரிக்கை விடு விக்கப்பட்டுள்ளது.

உதவிப் பேராசிரியர் பணியிடங்கள்: விண்ணப்பிக்க அவகாசம்!
சென்னை, ஏப். 27 - தமிழ்நாட்டின் கலைக் கல்லூரி மற்றும் கலையியல் கல்லூரிகளில் உள்ள 4000 உதவி பேராசிரியர் பணியிடங் களை போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்புவதற்கான அறி விப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த மார்ச் மாதம் அறிவித்திருந்தது.

ஆகஸ்ட் 4-ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ள நிலையில், மார்ச் 28 அன்று முதல் www.trb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்கள் பெறப் பட்டு வந்தன. இந்நிலையில், விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஏப்ரல் 29 முதல் மே 15 மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கோவை தேர்தல்: ஆஸ்திரேலிய மருத்துவர்  மூலம் வழக்கு
சென்னை, ஏப். 27 - கோவை மக்களவைத் தொகுதியில் பாஜக தலை வர் அண்ணாமலை படுதோ ல்வி அடைவது உறுதியாகி விட்ட நிலையில், தங்களு க்கு வாக்களிக்கும் 1 லட்சம் வாக்காளர்கள் நீக்கப் பட்டுள்ளதாக பாஜக-வினர் கூப்பாடு போட்டு வருகின்ற னர். இந்நிலையில், “கோவை மக்களவை தொகுதியில் பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர் களை மீண்டும் பட்டியலில் இணைத்து வாக்களிக்க அனுமதிக்கும் வரை தேர் தல் முடிவை அறிவிக்கக் கூடாது” என்று, ஆஸ்திரேலி யாவில் மருத்துவராக பணி யாற்றி வரும், கோவை  மாவட்டம் நஞ்சுண்டா புரத்தை சேர்த்த சுதந்திர கண்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு  
2 பொதுத்தேர்வு

புதுதில்லி, ஏப். 27 - சிபிஎஸ்இ பாடத்திட்டத் தில் பயிலும் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண் டுக்கு இரண்டு தேர்வுகள் நட த்தப்படும் என்று ஒன்றிய அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது. இந்நிலையில் ஒன் றிய கல்வி அமைச்சகமா னது, அடுத்த 2025-26 கல்வி ஆண்டு முதல், ஆண்டுக்கு இரண்டு பொதுத் தேர்வு களை நடத்துவதற்கு சிபி எஸ்இ தயாராகும்படி அறி வுறுத்தியுள்ளதாக தக வல்கள் வெளியாகியுள்ளன. மேலும் செமஸ்டர் திட்டம் அறிமுகப்படுத்தப்படாது என்றும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.