india

img

8 மணிநேர சிகிச்சைக்கு ரூ.77 ஆயிரம் பில்

மும்பை, ஏப்.25- மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் மட் டும் கொரோனா தொற்றால் 3,026 பேர் பாதிக் கப்பட்டுள்ளனர். மாநிலத்தின் மொத்த எண் ணிக்கை 6,817 ஆக உள்ளது. இந்த நிலையில் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சுவாசக் கோளாறால் பாதிக்கப்பட்ட நபருக்கு எட்டு மணி நேரம் மட்டுமே சிகிச்சையளித்து 77 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.

தெற்கு மும்பையில் உள்ள ஒரு சயிபி மருத்துவமனையில் மும்பையைச் சேர்ந்த ஆடை விற்பனையாளரான முகமது வாஹித் அன்சாரி (27) என்பவர், ஏப்.20-ஆம் தேதி கொரோனா பரிசோதனை மேற் கொண்டார். அவருக்கு கொரோனா தொற்று இல்லையென்பது உறுதியானது இருப்பினும் சுவாச பிரச்சனையால் அவ திப்பட்டதால் மருத்துவமனையில் உள் நோயாளியாக சேர்க்கப்பட்டார். முகமது வின் சகோதரர் ஷாஹித் அன்சாரி சேர்த்தார். சிகிச்சைக்கு முன்னரே ரூ.40 ஆயிரத்தை சேர்க்கை கட்டணமாக செலுத்தியுள்ளார். அடுத்த எட்டு மணிநேரத்தில் இறந்து விட்டார் என்ற செய்தியை கேட்டு அதிர்ந்து போனார். அதை விட சிகிச்சைக்கு மொத் தம் ரூ.77,819 ஆயிரம் செலவானதாக மருத் துவமனை கூறியதால் மேலும் அதிர்ச் சிக்குள்ளானார்.

இது குறித்து ஷாஹித் கூறுகையில், எனது சகோதரரை, அருகிலுள்ள சில அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்ல முயற்சித்தேன். அனைத்தும் நோயாளிகள் அதிகம் நிரம்பியிருந்ததால், சைபி மருத்து வமனைக்கு சென்றோம். காலை 11 மணி யளவில் என் மொத்த சேமிப்பு பணமான ரூ.40 ஆயிரத்தை கட்டி, சிகிச்சைக்கு அனு மதித்தோம். நான்கு மணிக்கு உடல்நிலை மோசமடைந்ததாகவும் ஏழு மணிக்கு இறந்துவிட்டதாகவும் கூறினார். அதுமட்டு மல்லாமல், உடலை ஒப்படைக்க, சிகிச்சை மற்றும் ஆம்புலன்ஸ் கட்டணங்களாக மேலும் ரூ.40 ஆயிரத்தை செலுத்த வேண் டும் எனவும் மருத்துவமனை நிர்வாம் தெரி வித்துள்ளது. நண்பர்களிடம் கடன் பெற்று ஏப்.23 ஆம் தேதி மீதத்தொகையை செலுத்திய பின்னர் அவரை ஆம்புலன்ஸ் மூலமாக கல்லறைக்கு கொண்டு வந்து அடக்கம் செய்தோம். இவ்வாறு அவர் கூறி னார்.

;