india

img

மதுபான கொள்கை முறைகேடு வழக்கு

புதுதில்லி,மே 7- தில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கின் கோப்பு களை நீதிமன்றத்தில் தாக்கல்  செய்ய வேண்டும் என்று அமலாக் கத்துறைக்கு உத்தரவிட்டுள்ள உச்சநீதிமன்றம், முறைகேடுகளை கண்டுபிடிக்க 2 ஆண்டுகளா? இது  அமலாக்கத்துறைக்கு அழகா? என்றும் காட்டமாக கேள்வி எழுப்பி யுள்ளது.

மதுபான கொள்கை முறைகேடு  வழக்கில் தில்லி முதல்வர் அர விந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்  துறையால் கைது செய்யப்பட்டு  திகார் சிறையில் அடைக்கப்பட் டுள்ளார். 

இதனை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை தில்லி உயர்நீதி மன்றம் ஏப்ரல் 9 அன்று தள்ளுபடி  செய்தது. அதைத் தொடர்ந்து உச்ச  நீதிமன்றத்தில் அவர் மேல்முறை யீடு செய்தார். 

இந்த மனு மீதான விசாரணை மே 7 அன்று உச்சநீதிமன்ற நீதிபதி கள் சஞ்சீவ் கண்ணா, தீபங்கர் தத்தா  அடங்கிய அமர்வு முன்பு நடை பெற்றது. அப்போது, மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலுக்கு எதிரான ஆதாரங் களை அமலாக்கத்துறை தாக்கல் செய்தது. 

இதனை பரிசீலித்த நீதிபதிகள்,  “ரூ.100 கோடி ஊழல் என்று கூறி னீர்கள், பிறகு 2 ஆண்டுகளில் ரூ. 1100 கோடியானது எப்படி?ரூ.100 கோடி லஞ்சம் கைமாறியது என்பது அமலாக்கத்துறை அதிகாரிகளின்  மூளையில் உதித்ததா?”என்று கேள்வி எழுப்பினர். இதற்கு அம லாக்கத்துறை வழக்கறிஞர், ரூ. 1100 கோடியில் மொத்த விற்பனை யாளர் லாபம் ரூ.590 கோடி என விளக்கம் அளித்தார். 

லாபம் என்பதை ஊழலில் கிடைத்த பணம் என்று கூற முடி யாது. மதுபான கொள்கை வழக்  கில் கெஜ்ரிவாலுக்கு தொடர்பி ருப்பதாக கண்டுபிடிப்பதற்கு 2  ஆண்டுகள் ஆகுமா? வழக்கு விசா ரணையின் தொடக்கத்தில் கெஜ்ரி வால் மீது அமலாக்கத்துறை கவ னம் செலுத்தவில்லையா? என காட்டமாக கேள்வி எழுப்பினர்.

விசாரணை அமைப்புக்கு அழகல்ல 
புலனாய்வு விசாரணையின் போதுதான் கெஜ்ரிவாலின் பங்கு என்ன என்பது தெளிவானது என்று  அரசு வழக்கறிஞர் கூறினார். அப்  போது குறுக்கிட்ட நீதிபதிகள், “முறைகேடுகளை கண்டுபிடிக்க 2 ஆண்டுகள் ஆனது என்று கூறு வது விசாரணை அமைப்புக்கு அழ கல்ல. மதுபான கொள்கை முறை கேடு வழக்கில் கெஜ்ரிவால் தொடர்பு  பற்றி முதல் கேள்வி எப்போது கேட்  கப்பட்டது? ஒருவரை கைது செய் யும் போது, சட்ட ஆதாரங்களை அதிகாரிகள் உறுதி செய்திருக்க வேண்டும். போதிய ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே ஒருவரை கைது செய்ய முடியும். அரவிந்த்  கெஜ்ரிவால் வழக்கில் ஒவ்வொரு  புள்ளியிலும் பல மாற்றங்கள் ஏற் பட்டுள்ளன. வாக்குமூலங்களில் கெஜ்ரிவால் பெயர் குறிப்பிடப்பட்ட விவரங்களை தாக்க செய்ய அம லாக்கத்துறைக்கு உத்தரவிடு கிறோம். இவ்வழக்கின் கோப்பு களில் அதிகாரிகள் என்ன எழுதி யுள்ளனர் என்பதை நாங்கள் பார்க்க  வேண்டியுள்ளது. வழக்கின் கோப்பு  களில் முதல் 2 பாகங்களையும் நீதி மன்றத்தில் தாக்கல் செய்ய வேண் டும்,” என்று அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தர விட்டனர்.

“கெஜ்ரிவால் தில்லியின் முதல்  வராக இருப்பதாலும், அவர் மக்க ளவைத் தேர்தலுக்கு பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பதாலும் அவ ரின் இடைக்கால ஜாமீனை நாங் கள் விசாரிப்போம். இது ஒரு  அசாதாரணமான சூழ்நிலை. கெஜ்ரிவால் குற்றம் செய்வதை வழக்கமாக கொண்டவரல்ல. தேர்தலுக்கு முன்பாக கைது  செய்யப்பட்டுள்ளதாக வாதிடுவ தற்கு கெஜ்ரிவால் தரப்புக்கு உரிமை  உள்ளது. தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் வருகிறது. இது ஒவ்வொரு நான்கு அல்லது ஆறு  மாதங்களுக்கு ஒருமுறை பயிர்  அறுவடை செய்வது போல இல்லை. அவரை இடைக்கால ஜாமீனில் வெளியே அனுப்ப வேண்டுமா என்று நாம் முன்னுரி மையின் அடிப்படையில் பரிசீலிக்க  வேண்டும்” என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

;