india

img

தமிழக அரசின் மனு மீதான விசாரணை ஜன.23-க்கு தள்ளிவைப்பு

மேகதாது அணைக்கு எதிராக வழக்கு

புதுதில்லி, நவ.10- காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் கர்நாடகா அரசு அணை கட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழக அரசு தாக்கல் செய்த  மனுமீதான விசாரணையை ஜனவரி 23 ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. புதிய அணை கட்ட சாத்தியக்கூறு அறிக்கையை தயா ரிக்க மத்திய நீர்வள ஆணையம் ஒப்புதல் வழங்கியது. மேலும் விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்குமாறும் கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கியது.தமிழகத்தின் எதிர்ப்பை மீறி மத்திய பாஜக அரசு,கர்நாடகத்தில் ஆட்சி யில் உள்ள பாஜக அரசுக்கு அனுமதி வழங்கியது. இதனை தமிழக விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினர் கண்டித்தனர்.  இந்நிலையில் மத்திய அரசின் ஒப்புதலை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. கர்நாடக அரசு தரப்பிலும் இடைக்கால மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி கன்வில்கர் தலை மையிலான அமர்வு முன்பு சனிக்கிழமையன்று விசார ணைக்கு வந்தது. அப்போது, கூடுதல் பிரமாணப் பத்தி ரங்களை தாக்கல் செய்வதற்கு கர்நாடகா கால அவகாசம் கோரியது.இதனை ஏற்றுக் கெர்ண்ட நீதிபதிகள், விசா ரணையை ஜனவரி 23 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 

;