புதுதில்லி, மார்ச் 4 - நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற அவையில் வாக்களிக்க மற்றும் பேசு வதற்கு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் லஞ்சம் வாங்குவது குற்றம்; லஞ்சம் வாங்கும் எம்.பி. - எம்.எல்.ஏ.க்கள் தண்டனைக்குரியவர்கள் என உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது
1993-ஆம் ஆண்டு பி.வி. நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்கும் வகையில் கூட்டணியில் இருந்துகொண்டே ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி உறுப்பினர்கள் மாற்றுக் கட்சிக்கு வாக் களித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த விவகாரம் தொடர்பான வழக் கில் கடந்த 1998-இல் உச்ச நீதிமன்ற அர சியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கி இருந்தது. “எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பேச, வாக்களிக்க லஞ்சம் பெற்றா லும் 105(2)-ன் கீழ் சட்ட பாதுகாப்பு தர முடியும்” என கூறியிருந்தது.
அந்த தீர்ப்பை 25 ஆண்டு களுக்குப் பிறகு மாற்றும் வகையில் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 7 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது.
“1998-ஆம் ஆண்டு பி.வி. நரசிம்ம ராவ் வழக்கின் தீர்ப்பை ஏற்றுக் கொள்ள முடியாது; சட்டப்பேரவை, நாடாளுமன்றத்தில் லஞ்சம் வாங்கும் உறுப்பினர்கள் விசாரணையில் இருந்து விலக்கு கோர முடியாது. சட்டப் பேரவை, நாடாளுமன்றத்தில் வாக்க ளிக்க லஞ்சம் வாங்குவது, பொது வாழ் க்கையில் நேர்மையை சீர்குலைப்ப தாகும். எனவே, 1998-ஆம் ஆண்டு பி.வி. நரசிம்மராவ் வழக்கின் தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது. லஞ்சம் வாங்குவது என்பது நாடாளுமன்ற சிறப்பு உரிமைகளால் பாதுகாக்கப் பட்டது அல்ல. நாடாளுமன்ற சலுகை யை பயன்படுத்தி எம்.பி. லஞ்சம் வாங்கி சட்ட பாதுகாப்பை பெறுவதை அனுமதிக்க முடியாது.
அரசியல் சாசனத்தின் 105(2), 194(2) பிரிவுகள் நாடாளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர்களான எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கத்தான் செய்கிறது. ஆனால் நாடாளுமன்றம், சட்டசபைகளில் பேசு வதற்கும் வாக்களிப்பதற்கும் லஞ்சம் வாங்கும் உறுப்பினர்களான எம்பி, எம்எல்ஏக்களுக்கு இது பொருந்தாது. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் லஞ்சம் வாங்கினாலும் குற்றமே. லஞ்சம் வாங்குவது என்பது எம்.பி, எம்.எல்.ஏ.க்களின் தனிப்பட்ட குற்றம். மாநிலங்களவை தேர்தலில் வாக்களிக்க லஞ்சம் பெறும் எம்எல் ஏக்கள் மீதும் ஊழல் தடுப்பு சட்டத் தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும்” என்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.