india

தேசிய தேர்வு முகமை அலுவலகத்திற்குள் மாணவர்கள் போராட்டம்

புதுதில்லி, ஜூன் 27- நடப்பாண்டு நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம், கருணை மதிப் பெண் தொடர்பாக பல்வேறு முறைகேடு சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. இந்த முறைகேடு தொடர்பாக நாடு முழுவதும் மாணவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.  

இந்நிலையில், தில்லியில் உள்ள  தேசிய தேர்வு முகமை அலுவல கத்திற்குள் நுழைந்து மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்ட னர். அலுவலகத்துக்குள் உட்புறமாக பூட்டிக் கொண்டு நீட் எதிர்ப்பு பதாகைகளை ஏந்தி மாணவர்கள் முழக்கமிட்ட நிலையில், மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தில்லி காவல்துறை தேசிய தேர்வு முகமை அலு வலகத்தை முற்றுகையிட்டு, மாணவர்கள் மீது தடியடி நடத்தியுள்ளது.

;