india

img

பிரதமர் மோடிக்கு சீத்தாராம் யெச்சூரி கண்டனம்

“நாடாளுமன்றத்தில் இடையூறு செய்யக் கூடாது” என  எதிர்க்கட்சிகளை மிரட்டிய  பிரதமர் மோடியின் கருத்திற்கு மார்க்  சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்  செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கண்ட னம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில்  கூறுகையில்,”18ஆவது மக்களவை யின் முதல் கூட்டத் தொடர் தொடங்கு வதற்கு முன்னதாக பிரதமர் மோடி  திங்களன்று காலை செய்தியாளர்களி டம், “நாட்டு மக்கள் நாடகம் மற்றும் அம ளியை விரும்பவில்லை; நாடு கோஷங்  களையும் விரும்பவில்லை. நாட்டிற்கு நல்ல எதிர்க்கட்சி, பொறுப்புள்ள எதிர்க்  கட்சி தேவை” எனக் கூறினார். 

நாடாளுமன்றத்தில் 150 எம்.பி.க்களை இடைநீக்கம் செய்த, எதிர்க்  கட்சி எம்.பி.க்களின் மைக்ரோபோன் களை (மைக்) அணைத்த, எதிர்க்கட்சித் தலைவர்களின் உரையை ஒளிபரப்பத்  தடை செய்த அதே சபாநாயகரை இரண்  டாவது முறையாக மீண்டும் மோடி  முன்மொழிகிறார். என்னே போலித் தனம்! இதுதான் மோடியின் “நாடக மும் இடையூறும்” என்று கூறி கண்ட னம் தெரிவித்துள்ளார்.