india

img

பீகார் ரயில் நிலையத்தில் இறந்துகிடந்த பெண்ணின் குழந்தைக்கு ஷாருக்கான் உதவி

பீகார் மாநிலம் முசாபர்பூர் ரயில் நிலையத்தில் இறந்துகிடந்த பெண்ணின் குழந்தைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக நடிகர் ஷாருக்கான் அறிவித்துள்ளார்.

கோவிட்-19 பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட லாக்டவுனால், கடந்த இரு மாதங்களாக ஏராளமான தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டது. இதனால், வேலையிழந்த புலம்பெயர் தொழிலாளர்கள், நடந்தும், சைக்கிளில் சென்றும், ரயில்களிலும், சொந்த ஊர் திரும்பினர். கடந்த வாரம் பீகார் மாநிலம் முசாபர்பூர் ரயில் நிலையத்தில் புலம்பெயர் தொழிலாளியான ஒரு பெண் இறந்துகிடந்தார். அவரின் ஒன்றரை வயது குழந்தை, தன் தாய் இறந்ததுகூடத் தெரியாமல்,  அவரை எழுப்ப முயன்றும், தாயின் போர்வை விலக்கிப் பார்த்து விளையாடிக்கொண்டிருந்தது. இந்த வேதனையான சம்பவத்தின் காணொளி, சமூக வலைத்தளங்களில் வைரலானது. 

இந்த நிலையில், நடிகர் ஷாருக்கான் தாயை இழந்த அந்த குழந்தைக்கு தேவையான அனைத்து உதவிகளையும், தனது மீர் அறக்கட்டளை மூலமாக வழங்குவதாக அறிவித்துள்ளார்.
 

;