மாநிலங்களவை தலைவர் தன்கர் பள்ளி தலைமை ஆசிரியர் போல் செயல்படுகிறார். மாநிலங்களவையில் அனுபவம் வாய்ந்த எதிர்க்கட்சி தலைவர்களை பேசவிடாமல் தடுக்கிறார். இந்தியாவின் நற்பெயருக்கு களங்
கம் ஏற்படுத்தும் வகையில் ஜகதீப் தன்கர் செயல்படுகிறார். இது கண்டிக்கத்தக்கது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே
விவசாயிகள் பிரச்சனையில் ஒன்றிய மோடி அரசு அலட்சியமாக உள்ளது. இதனால் விவசாயிகள் சாலைகளில் சிக்கித் தவிக்கின்றனர். இனியாவது காலம் கடத்தாமல் விவசாயிகள் போராட்டத்தில் தலையிட்டு பிரச்சனைக்கு பிரதமர் மோடி தீர்வுகாண வேண்டும்.
பஞ்சாப் சபாநாயகர் குல்தர் சிங் சாத்வான்
நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டுவது எதிர்க்கட்சிகளின் கடமை. ஆனால், கடந்த சில நாட்களாக அவையை முடக்க வேண்டும் என ஆளுங்கட்சியினர் செயல்பட்டு வருகின்றனர். ஆளும் கட்சியினர் மட்டுமே பேச அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால், எதிர்க்கட்சித் தலைவருக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
திமுக மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாடாளுமன்றத்தில் இருக்க அருகதை இல்லை என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பேசியிருக்கிறார். உங்களின் உத்தரவிலா நாங்கள் நாடாளுமன்றத்துக்கு வந்திருக்கிறோம்? அரசாங்கத்தை கேள்வி கேட்பதுதான் எங்களை போன்ற எதிர்க்கட்சிகளின் கடமை.
சிவசேனா (உத்தவ்) எம்.பி., பிரியங்கா சதுர்வேதி
மேற்கு வங்கத்தில்
பாபர் மசூதி கட்டப்படும்
திரிணாமுல் எம்எல்ஏ பேச்சு
மேற்கு வங்க மாநிலத்தில் பாபர் மசூதி கட்டப்படும் என ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ ஹுமாயூன் கபீர் பேசியுள் ளார். இதுதொடர்பாக கபீர் ஒரு பொ துக்கூட்டத்தில் பேசுகையில், “மேற்கு வங்க மாநிலத்தில் முஸ்லிம்கள் 34% உள்ளனர். இதற்காக நான் ஒன்றை முன்மொழிய விரும்புகிறேன். முர்ஷிதா பாத் மாவட்டம் பெல்தங்காவில் வரும் டிசம்பர் 6, 2025ஆம் ஆண்டுக்குள் 2 ஏக்கர் நிலத்தில் பாபர் மசூதியின் பணிகள் துவங்கும். சுமார் 90 சதவிகித முஸ்லிம் கள் வாழும் பெல்காவில் மசூதிக்காக 100 பேர் கொண்ட ஒரு அறக்கட்டளை அமைக்க வேண்டும். மசூதிக்காக பணப் பற்றாக்குறை இருக்காது. இதை கட்டுவ தற்காக நான் ரூ.1 கோடி நன்கொடை அளிக்க உள்ளேன்” என அவர் கூறினார்.
திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ வின் பேச்சுக்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரி வித்து போஸ்டர் ஒட்டி வருவதால் முர்ஷி தாபாத் மாவட்டத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது என்பது குறிப்பி டத்தக்கது.
தில்லியில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை
கெஜ்ரிவால் அறிவிப்பு
தில்லியில் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் சட்டமன்ற தேர்தல் நடை பெறுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட வேலைக ளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடு பட்டு வருகின்றன. இந்நிலையில், தில்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிடும் என்று ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் அறிவித்துள்ளார்.
தில்லி சட்டமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ், ஆம் ஆத்மி கூட்டணி பேச்சு வார்த்தை இறுதி கட்டத்தை எட்டி யுள்ளதாகவும், காங்கிரஸ் கட்சிக்கு 15 தொகுதிகள் ஒதுக்க ஆம் ஆத்மி முன் வந்துள்ளதாகவும் செய்திகள் வெளி யாகின. இந்த செய்தியை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்த கெஜ்ரிவால், “தில்லி தேர்தலை ஆம் ஆத்மி கட்சி தனது சொந்த பலத்தில் எதிர்கொள்ளும். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைய வாய்ப்பில்லை” என அவர் கூறியுள்ளார். தேர்தல் கூட்டணி குறித்து கெஜ்ரி வால் திட்டவட்டமாக தெரிவித்துள்ள தால், இந்த முறை தில்லி சட்டமன்றத் தேர் தலில் ஆம்ஆத்மி – பாஜக – காங்கிரஸ் என மும்முனைப் போட்டி உறுதியாகவுள்ளது.