அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2019-ல் மக்களவை தேர்தலின்போது கர்நாடக மாநிலம், கோலாரின் நடந்த பேரணியில் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி பங்கேற்றார். அதில், ”எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பெயர் இருக்கிறது” என ராகுல் காந்தி பேசியிருந்தார். இதை அடுத்து, மோடி என்ற குடும்ப பெயரை மையப்படுத்தி ராகுல் அவதூறாக பேசியது தொடர்பாக பாஜக எம்எல்ஏ மற்றும் குஜராத் முன்னாள் அமைச்சர் புர்னேஷ் மோடி ஆகியோர் குஜராத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கின் விசாரணை கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், 30 நாட்களில் மேல்முறையீடு செய்ய ராகுல் காந்தி சூரத் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.