india

உ.பி.யில் முன்னேறும் இந்தியா கூட்டணி!

புதுதில்லி, ஜன.27- உத்தரப்பிரதேச மாநிலத்தில் 2024 மக்க ளவைத் தேர்தலுக்கு, சமாஜ்வாதி - காங்கி ரஸ் கட்சிகள் இடையே தொகுதி உடன் பாடு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அசோக் கெலாட் மற்றும் அகிலேஷ் இடை யிலான பேச்சுவார்த்தையில் முதற்கட்டமாக காங்கிரஸ் கட்சிக்கு 11 தொகுதிகள் வரை  ஒதுக்கீடு செய்வதற்கு சமாஜ்வாதி கட்சி முன்வந்துள்ளது. “11 தொகுதிகள் என்பது ஒரு முன்  மொழிவுதான்.

அதிக இடங்களை வெல்  லக்கூடிய வேட்பாளர்களைப் பற்றி காங்கி ரஸ் கட்சி, அகிலேஷிடம் தெரிவித்தால் அதுவும் ஏற்றுக்கொள்ளப்படலாம்” என  சமாஜ்வாதி கட்சி இணக்கமான நிலை பாட்டை எடுத்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி - காங்கிரஸ் இடையிலான தொகுதி உடன்  பாடு, அகில இந்திய அரசியலில் மிக முக்கி யமான முன்னேற்றமாக அமைந்துள்ளது.  பாஜகவைத் தோற்கடிக்க 26 கட்சி களைக் கொண்ட வலுவான ‘இந்தியா’ கூட்டணி அமைந்துள்ளது என்றாலும், நாட்டிலேயே மிக அதிகமான (80) மக்க ளவைத் தொகுதிகளைக் கொண்ட உத்த ரப்பிரதேசத்தில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி அமையுமா? என்பது இதுவரை கேள்விக் குறியாகவே இருந்து வந்தது.

 ‘இந்தியா’ கூட்டணியில் சமாஜ்வாதி,  காங்கிரஸ் கட்சிகள் இடம்பெற்றிருந்தா லும், அவர்களுக்குள்ளான தொகுதிப் பங்  கீடு ஏற்படாது என்பதுதான் பலரின் பார்வை யாக இருந்தது. பாஜக-வின் நம்பிக்கை யாகவும் இருந்தது. இது மீண்டும் தங்க ளுக்கு சாதகமாக அமையும் என்று பாஜக கணக்குப் போட்டிருந்தது. ஆனால், அது தற்போது தப்புக் கணக்காகி விட்டது. இதுதொடர்பாக, சமாஜ்வாதி கட்சித் தலைவரும், உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான அகிலேஷ், தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “காங்கிரஸ் கட்சியுடனான எங்கள் நல்லுறவு கூட்டணி  11 வலுவான இடங்களுடன் நல்ல தொடக்  கத்தில் உள்ளது. இந்தப் பேச்சுவார்த்தை வெற்றிகரமான முடிவை நோக்கி முன்னே றும்” என்று தெரிவித்துள்ளார். மேலும், ‘இந்தியா’ அணியும் ‘பிடிஏ’ (Pichre Dalit and Alpashankhak- PDA) (பிற்படுத்தப்பட்ட மக்கள், தலித்துக்கள் மற்றும் சிறுபான்மையினர்” உத்தியும் வர லாற்றை மாற்றும்” எனத் தெரிவித்துள்ளார். அதேபோல அசோக் கெலாட் அளித்தி ருக்கும் பேட்டியில், “தொகுதிப் பங்கீடு  தொடர்பாக அகிலேஷூடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.

நேர் மறையான மற்றும் ஆக்கப்பூர்வமான முறையில் பேச்சுவார்த்தை உள்ளது.  இதில் தொகுதி பங்கீடு முழுமையான பிறகு  முறைப்படி அறிவிக்கப்படும். உத்தரப்பிர தேசத்தில் காங்கிரஸ் - சமாஜ்வாதி இடை யிலான தொகுதி உடன்பாடு, ‘இந்தியா’ கூட்டணிக்கு சாதகமாக இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.