india

img

அனில் அம்பானிக்காக ராணுவ விதிகளையே மீறியது மோடி அரசு ரபேல் ஊழலுக்கு மேலும் ஆதாரங்கள்...

புதுதில்லி, ஏப்.9-

பிரான்ஸ் நாட்டின், டஸ்ஸால்ட் நிறுவனத்திடமிருந்து, ரபேல் போர் விமானங்களைக் கொள்முதல் செய்வதில், மோடி அரசு ரூ. 58 ஆயிரம் கோடி அளவிற்கு ஊழல் செய்திருப்பதாக, எதிர்க் கட்சிகள் இப்போதுவரை குற்றச்சாட்டு வைத்து வருகின்றன.கொள்முதல் செய்யப்படும் ரபேல் விமானங்களின் எண்ணிக்கையை குறைத்தது; விமானங்களுக்கு மூன்றுமடங்கு அதிக விலை கொடுக்க சம்மதித்தது; டஸ்ஸால்ட் நிறுவனத்தின் கூட்டுநிறுவனமாக இருந்த இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தை வெளியேற்றி விட்டு, அனில் அம்பானியின் ‘ரிலையன்ஸ் டிபென்ஸ்’ நிறுவனத்தைச் சேர்த்துக்கொண்டது ஆகியவை தொடர்பாக எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு மத்திய அரசால் எந்த பதிலும் அளிக்க முடியவில்லை.நாட்டின் பாதுகாப்பு தொடர்புடைய விஷயம் என்பதால், ரபேல் ஒப்பந்தம் பற்றி வெளிப்படையாக விவாதிக்க முடியாது என்ற வார்த்தைகளையே திரும்பத்திரும்ப கூறி வருகிறது.ரபேல் ஊழல் தொடர்பான ஆதாரங்களை, பிரான்ஸ் நாட்டு ஊடகங்களேவெளியிட்ட போதும், ‘ரபேல் ஒப்பந்தம்நடந்த போது, பிரான்ஸ் அரசுடன், இந் திய பிரதமர் அலுவலகம் நேரடியாக பேரம் பேசியது; இந்தியாவுக்கு இழப்புஏற்பட்டாலும் பரவாயில்லை என்று அனில் அம்பானி ஆதாயம் அடைய வேண்டும் என்பதற்காக இவ்வாறு பேரத்தில் இறங்கியது’ என்று ‘தி இந்து’ ஆங்கில ஏட்டின் ஆசிரியர் என். ராம் பகிரங்கமாகவே குற்றம் சாட்டிய போதும் கூட, மோடி அரசு விசாரணைக்கு முன்வரவில்லை.இந்நிலையில், ரபேல் ஒப்பந்த விவகாரத்தில், ‘ரிலையன்ஸ் டிபென்ஸ்’ நிறுவனத்திற்கு சாதகமாக, மோடி அரசு செய்த அதிகார துஷ்பிரயோகம் குறித்து மேலும் பல புதிய ஆதாரங்களை என். ராம் வெளியிட்டுள்ளார்.


“இந்திய ராணுவ விமான ஒப்பந்தவிதிகளில் இரண்டு முக்கியமான விஷயங்களை அடிப்படையாக கடைபிடிக்க வேண்டும். முதலில் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் யாருடன் பேச்சுவார்த்தை நடத்துவது என்பது குறித்து முடிவெடுக்க வேண்டும். இது முறையற்ற கமிஷன் கைமாறுவதற்கு எதிரானவிதியாகும்.மற்றொன்று, வெளிநாட்டு நிறுவனங்கள் ஒப்பந்த கணக்குகளை பார்க்க அனுமதி வழங்குவது தொடர்பாக முடிவெடுக்கும் விஷயமாகும்.ஆனால் இந்த இரண்டு விதிகளையும் மோடி அரசு காற்றில் பறக்கவிட்டு இந்த ஒப்பந்தத்தை செய்து இருக்கிறது.இதன்படி, முதல் விதியான பேச்சுவார்த்தை விதியில் முறைகேடு நடந்து உள்ளது. அதாவது இந்தியாவின் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை குழுவுடன் மட்டும் பிரான்ஸ் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. தனிப்பட்ட முறையில் பிரதமர்அலுவலகமும், பிரான்ஸ் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது.அதேபோல் ஒப்பந்தத்தின் கணக்கு வழக்குகளை பார்க்க ‘டஸ்ஸால்ட்’ நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. இது இந்திய ஒப்பந்த விதிமுறைகளின்படி மிக மிக தவறு. ஆனால்இந்த இரண்டு விதிகளையும் கண்டுகொள்ளாமல்தான், ஒட்டுமொத்த ஒப் பந்தமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால், இந்த ஒப்பந்தத்தில் ‘டஸ்ஸால்ட்’ நிறுவனத்திற்குதான் அதிக லாபம் கிடைத்து இருக்கிறது. இந்த விதிமுறை மீறலுக்கு அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். அதேபோல் ரபேல்ஒப்பந்த பேச்சுவார்த்தை குழுவில் இடம்பெற்று இருந்த அதிகாரிகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர்.ஆனால் அனைத்தையும் மீறித்தான்பிரதமர் அலுவலகம் நடத்திய தனிப்பட்டபேச்சுவார்த்தை மூலம் இந்த ஒப்பந்தம் இறுதி வடிவம் பெற்று இருக்கிறது.” என்று என். ராம் குறிப்பிட்டுள்ளார்.

;