india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

ராகுல் உரையை நீக்கி மோடி அரசு அராஜகம்

மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அடுக்கடுக்காக பிரச்சனைகளை எழுப்பி பாஜவை திணற டித்தார். ராகுலின் 100 நிமிட பேச்சால் அவையில் அனல் பறந்த நிலையில், அவர்  ஆற்றிய உரையில் “மோடி, பாஜக, ஆர்எஸ்எஸ் ஒட்டுமொத்த இந்துக்களின் பிரதிநிதி அல்ல”, “அக்னிவீர் திட்டம்”, “அதானி, அம்பானி” உள்ளிட்ட 11 உரை  பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன.

சபாநாயகரின் செயல்  ஜனநாயக விரோதம்

இந்நிலையில், மக்களவையில் தான் ஆற்றிய உரையில் சில பகுதிகள் நீக்கப்பட்  டது குறித்து சபாநாயகர் ஓம் பிர்லா வுக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்  ளார். கடிதத்தில்,”நாட்டின் களநிலவரம்,  உண்மைகளையே தான் மக்களவையில்  எடுத்துக்கூறினேன். ஆனால் எனது பேச்  சின் முக்கிய பகுதிகள் நீக்கப்பட்டுள்ளது. முழுவதும் குற்றச்சாட்டுகளை கூறிய பாஜக எம்.பி. அனுராக் தாக்கூரின் பேச்சு கள் ஏன் நீக்கப்படவில்லை?  மக்களின் பிரச்சனைகளை பேசுவதற்கு ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் உரிமை  உள்ளது. நாடாளுமன்ற அவை விதி 380ஐ  எந்த வகையிலும் நான் மீறவில்லை. சபா நாயகரின் செயல் ஜனநாயகத்துக்கு விரோ தமானது” எனக் கூறப்பட்டுள்ளது.

உண்மையை மறைக்க முடியாது

தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில்  ராகுல் காந்தி பேசுகையில்,” அவை குறிப்புகளில் இருந்து என்னுடைய பேச்சை நீக்கிவிட்டால் உண்மை இல்லை  என்றாகிவிடுமா? மோடி அரசு என்னுடைய  பேச்சு முழுவதையுமே கூட சபைக் குறிப்  பில் இருந்து நீக்கலாம். நாங்கள் கவ லைப்படவில்லை. மோடியின் உலகத்தில்  உண்மைகள் நீக்கப்படத்தான் செய்யும். நான் பேசியது உண்மைதான்” என பேசினார்.

புதுதில்லி
நீட் விலக்கு சட்டத்துக்கு ஒப்புதல் வேண்டும்

திமுக எம்.பி. வில்சன் வலியுறுத்தல்

மாநிலங்களவையில் ஜனாதி பதி உரைக்கு நன்றி தெரி விக்கும் தீர்மானத்தில் திமுக  எம்.பி. வில்சன்,”நீட் தேர்வு மோசடியால்  பல லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட் டுள்ள நிலையில், நீட் விலக்கு மசோதா உள்துறை அமைச்சகம் மூலம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டு 3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. கலைஞர் கருணாநிதி ஆட்சியில் நீட்  தேர்வுக்கு நீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்கப்பட்டது. தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசும் நீட் தேர்வை ரத்து  செய்ய தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அதனால் நீட் விலக்கு சட்டத் துக்கு உடனடியாக ஒப்புதல் வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டும்” என கூறினார்.

புதுதில்லி
ரீசார்ஜ் கட்டணத்தை குறைத்த பிஎஸ்என்எல்

மக்களவை தேர்தல் முடிந்து மீண் டும் மோடி ஆட்சி அமைந்தவுடன் ஜியோ, ஏர்டெல், வோடாபோன்  உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்  கள் தங்களது செல்போன் ரீசார்ஜ் சேவை  கட்டணத்தை 12 முதல் 27 சதவிகிதம் வரை  உயர்த்தி மீண்டும் கட்டணக் கொள்ளை யைத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில், இதற்கு எதிர்மறை யாக இந்திய பொதுத்துறை தொலைத் தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் ரீசார்ஜ் கட்டணத்தை குறைத்து அதிரடி  அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் படி, பிஎஸ்என்எல் ரூ.249க்கு புதிய திட்  டத்தை அறிமுகம் செய்துள்ளது. பிஎஸ்  என்எல் அறிமுகம் செய்துள்ள இந்த திட்டம் முற்றிலும் புதிய திட்டம் ஆகும்.  இதன் வேலிடிட்டி 45 நாட்கள் நீடிக்கும்.  இந்தியாவில் உள்ள எந்த நெட்வொர்க் கிற்கும் இலவச அன்லிமிடெட் அழைப்பு.  மொத்தம் 90 ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 2ஜிபி பயன்படுத்தலாம் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ் என்று  அறிவித்துள்ளது. பிஎஸ்என்எல்-லின் இந்த அறிவிப்பிற்கு நாடு முழுவதும் வர வேற்பு குவிந்துள்ளது.

புதுதில்லி
கெஜ்ரிவால் வழக்கு
சிபிஐக்கு தில்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி  மூத்த தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை  வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை யால் கைது செய்யப்பட்டு தில்லி திகார் சிறையில் உள்ளார். இந்நிலையில், கடந்த வாரம் அதே மதுபான வழக்கு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப் பும் (சிபிஐ) அவரை கைது செய்தது. 3  நாட்கள் சிபிஐ காவலுக்குப் பிறகு தில்லி  ரோஸ் அவென்யூ நீதிமன்றம் கெஜ்ரி வாலுக்கு ஜூலை 12 வரை நீதிமன்றக் காவல் வழங்கியது.

இந்நிலையில், தன்னை சிபிஐ கைது  செய்ததை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரி வால் தில்லி உயர்நீதிமன்றத்தில் திங்க ளன்று புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனு செவ்வாயன்று நீதி பதி நீனா பன்சால் கிருஷ்ணா அமர்வு விசாரணைக்கு வந்த நிலையில், கெஜ்ரி வால் மனு தொடர்பாக விளக்கம் அளிக்க சிபிஐக்கு தில்லி உயர்நீதிமன்றம் நோட்  டீஸ் அனுப்பியுள்ளது.

புதுதில்லி
நீட் முறைகேடு வழக்கு ஜூலை 8இல் விசாரணை

நீட் முறைகேடு தொடர்பாக மாண வர்கள், பெற்றோர்கள், பயிற்சி  மையங்கள் சார்பில் 30க்கும் மேற் பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில்  வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண்  தொடர்பான மனுக்கள் விசாரிக்கப் பட்டுள்ள நிலையில், மீதமுள்ள மனுக்  கள் ஜூலை 8 அன்று  தலைமை நீதிபதி  டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வு முன்பு வழக்கு  விசாரணைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.




 

;