india

img

சாலைப் பாதுகாப்பு கமிட்டி கூட்டங்கள் பற்றிய விபரங்கள் அமைச்சகத்தில் இல்லை ... நாடாளுமன்றத்தில் பி.ஆர்.நடராஜன் எழுப்பிய கேள்வியால் அம்பலமானது

தில்லி:
மாவட்ட சாலை பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு கமிட்டியின் செயல்பாடுகள் பற்றி கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வியாழனன்று  மக்களவையில் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.மாவட்ட சாலை பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு கமிட்டியின் கூட்டங்களை நடத்துவதற்கான நடைமுறை விவரங்கள் என்னென்ன? நாடு முழுவதும் சமீப காலங்களில் நடத்தப்பட்ட இத்தகைய கூட்டங்களின் எண்ணிக்கை எவ்வளவு? கோயம்புத்தூர் மாவட்டத்தில் இதுபோன்ற நடத்தப்பட்ட கூட்டத்தின் விவரங்கள், மற்றும் முடிவுகள் என்னென்ன? எனக் கேட்டார்.

அதற்கு, மத்திய நெடுஞ்சாலை மற்றும் சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரிபதிலளித்தார். அதில், மோட்டார் வாகனச் சட்டம், 1988ன் பிரிவு 215,துணைப்பிரிவு (3) ன் படி, மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மாவட்ட சாலை பாதுகாப்பு கமிட்டி அமைக்க அந்தந்த மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது. சட்ட விதிகளின் படி, சாலைப் பாதுகாப்பு குறித்து குறிப்பிட்டு மாநில அரசுகள் கூறும் பணிகளை இந்த கமிட்டிகள் நிறைவேற்றுகின்றன. மேலும், செப்டம்பர் 2017 ல்சாலை போக்குவரத்து மற்றும்நெடுஞ்சாலை அமைச்சகம் நாடாளுமன்ற உறுப்பினர்  (மக்களவை) தலைமையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சாலைப் பாதுகாப்பு கமிட்டி அமைப்பது குறித்துகுறிப்பிட்டுள்ளவாறு, 30.08.2019ல் வெளிடப்பட்ட ஆணையில் சாலைப் பாதுகாப்புக்கான நாடாளுமன்ற தொகுதி கமிட்டிஎன பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அந்தந்த மாவட்டத்தில் வசிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் (மாநிலங்களவை) இந்தக்கமிட்டியின் சிறப்பு அழைப்பாளராகவும் அமர்த்தப்பட்டார்.அதன்பிறகு, 19.12.2019 ல் இந்தக் கமிட்டி, நாடாளுமன்ற உறுப்பினர் சாலைப் பாதுகாப்பு கமிட்டிஎனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அந்தந்த மாவட்ட ஆட்சியர் இந்தக் கமிட்டியின் ஆட்சியர் செக்ரட்டரியாகவும், மாவட்ட அளவிலுள்ள மற்றசம்பந்தப்பட்ட துறைகளின்தலைவர்கள் உறுப்பினர்களாகவும் உள்ளனர். இந்தக் கமிட்டி குறைந்தபட்சம்காலாண்டுக்கு ஒரு முறையோ அல்லது முடிவு செய்யப்படும் குறிப்பிட்ட கால அளவிலோ கூட்டப்பட வேண்டும். கூட்டத்தில்விவாதிக்கப்பட்ட விபரங்கள், முந்தைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விபரங்களும், மாநில காவல் துறை இயக்குனர் ஜெனரல் மற்றும் மாநிலபோக்குவரத்து கமிஷனர் ஆகியோருக்கு அனுப்பப்படவேண்டும்.

விதிமுறைகள்
மாவட்டத்தின் சாலைப் பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணித்தல். சாலை விபத்துபற்றிய புள்ளி விபரங்களை கண்காணித்தல். சாலை விபத்துக்களுக்கான காரணங்களை அடையாளம் கண்டு அவைகளை ஆய்வு செய்தல். தேசிய, மாநில சாலைப் பாதுகாப்பு கவுன்சிலுக்கு ஆலோசனைகள் வழங்குதல். நெறிமுறைகளின்படி, குறைபாடுகளை (black spots) அடையாளம் காணுதல், சரிசெய்தல் பணிகள் மற்றும் அனைத்து சாலை பொறியியல்நடவடிக்கைகள் ஆகியவற்றை மீள் பார்வை செய்தல், கண்காணித்தல். சாலைப் பாதுகாப்பு தர நிலையை செயல்படுத்துவதை உறுதிப்படுத்துதல். விபத்து குறைப்பு மற்றும் இறப்பு குறைப்பு ஆகியவற்றை, மாவட்டம் முழுவதற்குமான, குறிப்பான இலக்குகளாகக் கொண்டு, சாலைப் பாதுகாப்பு செயல் திட்டங்களை உருவாக்குதல் மற்றும் செயல்படுத்துதல். 4 ‘இ’ திட்டமான - கல்வி, அமலாக்கம், அவசரகாலம், பொறியியல் என்பதைபற்றி விவாதித்தல் மற்றும் செயல்படுத்துதலை வலிமைப்படுத்துதல். வேக வரம்பு மற்றும் போக்குவரத்தை அமைதிப்படுத்தும் நடவடிக்கைகள் ஆகியவற்றை மீள் பார்வை செய்தல். சாலை பதம்பார்த்தலை (good Samaritans) ஊக்குவிக்கும் விதமான நிலைபாடுகளை முறைப்படுத்துதல். மாவட்டத்தில் கிராம பஞ்சாயத்து, நகரம் ஆகியவற்றில் பயிற்சி மையத்தோடு கூடிய போக்குவரத்து பூங்காக்கள் அமைத்தல். சாலைப் பாதுகாப்பு பிரச்சாரத்தை ஊக்குவித்தல். சாலைப் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட வேறு மற்ற பிரச்சனைகளை விவாதித்தல் ஆகியவைஇக்கமிட்டியின் விதிமுறைகளாகும்.  ஆனால் மாவட்ட சாலைப் பாதுகாப்பு கமிட்டி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாலைப் பாதுகாப்பு கமிட்டி ஆகியவற்றின் கூட்டங்கள் பற்றிய விபரங்கள்அமைச்சகத்தால் பேணப்படவில்லை என நிதின் கட்காரி பதில் அளித்தார்.

;