கொல்கத்தா மருத்துவ மாணவி பாலியல் வன்கொலை எதிரொலியால் மேற்கு வங்க சட்டமன்றத்தில் பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் “அப ராஜிதா” என்ற பெயரில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் 2024 நிறைவேற்றப்பட்டது.
கொல்கத்தா ஆர்ஜிகே மருத்துவ மாணவி பாலியல் வன்கொலை தொ டர்பாக மேற்கு வங்கத்தை ஆளும் திரி ணாமுல் காங்கிரஸ் ஆட்சி மற்றும் சட்டம் ஒழுங்கிற்கு எதிராக நாடு முழு வதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த எதிர்ப்பால் மிரண்ட அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி சிறப்பு சட்ட மன்ற கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தி ருந்தார். அதன்படி திங்களன்று சிறப்பு சட்டமன்றக் கூட்டம் கூடியது.
இந்நிலையில், மருத்துவ மாணவி பாலியல் வன்கொலையை திசை திருப்பும் நோக்கத்தில் திங்களன்று பிற்பகல் மேற்கு வங்க சட்ட அமைச் சர் மோலோய் கட்டக் “அபராஜிதா” என்ற பெயரில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சட்டமசோதா 2024-ஐ சட்டமன்றத்தில் அறிமுகப் படுத்தினார். மசோதா மீதான விவா தத்திற்கு பின் செவ்வாயன்று பிற்பகல் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் பிமன் பானர்ஜி அறிவித்தார். ஆளுநரின் ஒப்புதலை அடுத்து இந்த மசோதா சட்ட வடிவம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
“அபராஜிதா” மசோதா?
“அபராஜிதா” மசோதாவில் பாலி யல் வன்கொடுமையில் ஈடுபட்ட நபர் அல்லது நபர்களின் செயல்களால், பாதிக்கப்பட்ட பெண் மரணம் அடைந்தா லோ அல்லது உடல் ரீதியாக முடக் கப்பட்டாலோ குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க முடியும். மேலும் பாலியல் வன்கொடுமை மற்றும் கும்பல் பாலியல் வன்கொ டுமை செய்பவர்களுக்கு பரோல் இல்லாமல் ஆயுள் தண்டனை விதிக்க முடியும்.