india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

பழங்குடி எம்எல்ஏக்களிடம் கெஞ்சும் மணிப்பூர்  பாஜக முதல்வர்

வன்முறையால் கடந்த ஒன்றரை வருடமாக பற்றி எரிந்து கொண்டிருக்கும் மணிப்பூர் சட்டமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 31 அன்று தொடங்க உள்ளது. இந்த கூட்டத்தொடரில் பங்கேற்குமாறு மணிப்பூர் முதல்வரான பாஜகவின் பைரன் சிங் பழங்குடி எம்எல்ஏக்களிடம் கெஞ்சியுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பைரன் சிங் கூறுகை யில், “வரவிருக்கும் சட்டமன்றக் கூட்டத் தில் பங்கேற்க தனிப்பட்ட முறையிலும், சட்டமன்றம் மூலமாகவும் 10 குக்கி-ஸோ எம்எல்ஏக்களுக்கு அழைப்பு விடுக்க உள்ளேன். 10 பேரும் எங்களுடன் இணைந்து கொள்ள வேண்டும்.அவர்களுக்கு அரசு ஒத்துழைப்பு தரத் தயார்” என கெஞ்சியுள்ளார்.

மணிப்பூரில் வன்முறை வெடித்த நாள் முதல் அரசுக்கு வழங்கிய ஆத ரவை வாபஸ் பெற்ற பழங்குடி யினத்தைச் சேர்ந்த (குக்கி-ஸோ இனம்) 10 எம்எல்ஏக்களும் சட்டமன்றக் கூட்ட  தொடரிலும், அரசு தொடர்பான நடவடிக்கைகளிலும் இருந்து ஒதுங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி மாளிகை மண்டபங்களின் பெயர்களும் மாற்றம்

ஜனாதிபதி மாளிகையில் தர்பார் ஹால், அசோக் ஹால் என இரண்டு மண்டபங் கள் உள்ளன. இந்த இரண்டு முக்கிய மண்டபங்களின் பெயர்களை மோடி அரசு காரணமின்றி மாற்றம் செய்துள்ளது. தர்பார் ஹாலின் பெயர் “கணதந்திர மண்டபம்” என்றும் அசோக் ஹாலின் பெயர் “அசோக் மண்டபம்” என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தேசிய விருதுகள் வழங்கும் நிகழ்வுகள் போன்ற முக்கிய மான விழாக்கள் மற்றும் கொண்டாட்ட ங்கள் நடைபெறும் இடமாக “தர்பார் ஹால்” உள்ளது. இந்த பெயர் மாற்றம் தொடர்பாக மோடி அரசு எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை.

கர்நாடகத்திலும் நீட் தேர்வுக்கு எதிராக மாநில அரசு தீர்மானம்

தமிழ்நாடு, மேற்கு வங்க மாநிலத்தை போன்று நீட் தேர்வுக்கு எதி ராக கர்நாடக அர சும் தீர்மானம் நிறைவேற்றி யுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் தற்போது மழைக்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. வெள்ளியன்று அவை நடவடிக்கை தொடங்கியவுடன் அம்மாநில சட்டத்துறை  அமைச்சர் எச்.கே.பாட்டில் நீட் எதிர்ப்பு தீர்மா னத்தை கொண்டுவந்தார். நீட் தேர்வில்  இருந்து கர்நாடகத்தை சேர்ந்த மாண வர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என தீர்மானத்தில் வலி யுறுத்தப்பட்டிருந்தது.

இந்த தீர்மானம் கொண்டுவரும் போது பாஜக எம்எல்ஏக்கள் அவையின் மையப்பகுதியில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு  புறம் பாஜக ஆர்ப்பாட்டம் செய்திருந்தா லும் மறுபுறம் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இந்த  தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்க ளித்து தீர்மானத்தை நிறைவேற்றி னர். முதற்கட்டமாக சட்டப்பேரவை யில் இத்தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. இன்னும் இரு நாட்களில் சட்டமேலவையிலும் இந்த தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு அவை களிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு இதை ஆளுநருக்கு ஒப்புத லுக்காக அனுப்பிவைப்பார்கள்.

புதுதில்லி
கெஜ்ரிவாலுக்கு எதிராக பாஜக சதி : ஜூலை 30 இல்
“இந்தியா” கூட்டணி போராட்டம்

மதுபான கொள்கை வழக்கில்  தொடர்பு இருப்பதாக அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்  திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கிடைத்தாலும், சிபிஐ வழக்கு நிலுவை யில் இருப்பதால் கெஜ்ரிவால் சிறையில் இருந்து வெளியே வர முடியாத நிலையில் உள்ளார். 

மேலும் சர்க்கரை நோயாளியான கெஜ்ரிவாலுக்கு எதிராக திகார் சிறை நிர்வாகத்தின் உதவியால் பாஜக பல்வேறு சதி வேலைகளில் ஈடுபட்டு வரு கிறது. இன்சுலின் மற்றும் போதுமான மருத்துவ சிகிச்சை அளிக்க அனுமதி வழங்காமல் திகார் சிறை நிர்வாகம் பார பட்சமான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இதனால்  கெஜ்ரிவாலின் உடல்நலம் நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இந்நிலையில், தில்லி திகார் சிறை நிர்வாகம் மற்றும் மோடி அரசைக் கண்டித்து தில்லியில் வருகிற ஜூலை 30 அன்று “இந்தியா” கூட்டணி சார்பில் போராட்டம் நடத்தப்பட உள்ளதாகவும், கெஜ்ரிவாலுக்கு உரிய சிகிச்சை தர வலியுறுத்தி தில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தப்படும் எனவும் ஆம் ஆத்மி அறிவித்துள்ளது.