india

img

மகாராஷ்டிராவில் பொது இடங்களில் புகைபிடிப்போருக்கு 2 ஆண்டுகள் வரை சிறை

மகாராஷ்டிரா மாநிலத்தில், பொது இடங்களில் புகைபிடிப்போருக்கு 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அம்மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62,228 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2098 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையிலும் புகை பிடிப்பவர்கள் மற்றும் புகையிலை பயன்படுத்துவோர்கள் பொது இடங்களில் எச்சில் துப்பும் வழக்கம் உள்ளது.  இதனால், கோவிட்-19 தொற்று அதிகமாக பரவும் அபாயம் உள்ளது. இந்த நிலையில், மகாராஷ்டிராவில், பொது இடங்களில் எச்சில் துப்பினாலோ அல்லது புகைபிடித்தாலோ 6 மாதங்கள் சிறை தண்டனையும், மீண்டும்  அதே தவறு செய்பவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்று அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
 

;