india

img

மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் சட்டப்பேரவை தேர்தல் - வாக்குப்பதிவு நிறைவு!

மத்தியப் பிரதேசத்தில் 230 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகவும், சத்தீஸ்கரின் 70 தொகுதிகளில் இரண்டாம் கட்டமாகவும் இன்று நடைபெற்ற வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் மொத்தம் 230 சட்டப்பேரவை தொகுதிகளில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. மத்தியப் பிரதேசத்தில் மொத்தம் 5.6 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 2.88 கோடி பேர் ஆண்கள். 2.72 கோடி பேர் பெண்கள். இந்த தேர்தலில் 22.36 லட்சம் இளைஞர்கள் முதல்முறையாக வாக்களிக்க உள்ளனர். இந்த நிலையில், மாலை 5 மணி நிலவரப்படி, 71.11%வாக்குகள் பதிவாகி உள்ளன.
அதேபோல், சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் 90 சட்டப்பேரவை தொகுதிகளில், 1.63 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 81.41 லட்சம் பேர் ஆண்கள், 81.72 லட்சம்
கடந்த 7-ஆம் தேதி, 20 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் நடைபெற்றது. இதில் 78 சதவீத வாக்குகள் பதிவாகின. இதைத்தொடர்ந்து இன்று 70 தொகுதிகளில் இரண்டாம் கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில், மாலை 5 மணி நிலவரப்படி, 67.34% வாக்குகள் பதிவாகி உள்ளன.
வாக்கு எண்ணிக்கை வரும் டிசம்பர் 3-ஆம் தேதி நடைபெறுகிறது.