india

img

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை வேண்டுமா?

இந்திய ரிசர்வ் வங்கியில் நிரப்பப்பட உள்ள 322 கிரேடு பி அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன் விவரம் பின்வருமாறு;

விளம்பர எண். 1A /2020-21
நிறுவனம்: இந்திய ரிசர்வ் வங்கி

பணி: Officers in Grade ‘B’(DR)- General 
காலியிடங்கள்: 270

பணி: Officers in Grade ‘B’(DR)- DEPR 
காலியிடங்கள்: 29

பணி: Officers in Grade ‘B’(DR)- DSIM  
காலியிடங்கள்: 23

வயதுவரம்பு: 1.01.2021 தேதியின்படி 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.35,150 - 50,900 
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.850, எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினர் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். வங்கி ஊழியர்கள் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: www.rbi.org.in, https://opportunities.rbi.org.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.02.2021

தகுதி மற்றும் மேலும் விவரங்கள் அறிய https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/ADVTGBDRB092851E3E1C4D219C54676FA642772E.PDF என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

;