india

img

நாடாளுமன்றத்தில் ஜெய் ஸ்ரீராம் கோஷம் போடுவது தவறானது!

புதுதில்லி:
‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷம் போடுவதற்கான இடம், நாடாளுமன்றம் கிடையாது என்று சுயேட்சை எம்.பி.யும், திரைக்கலைஞருமான நவ்நீத் கவுர், பாஜக எம்.பி.க்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
“ஜெய் ஸ்ரீராம் என்று கூறுவதற்கு கோயில்கள் இருக்கின்றன. நாடாளு மன்றம் அதற்கு ஏற்ற இடம் அல்ல. நாடாளுமன்றத்தைப் பொறுத்தவரை, எல்லா கடவுள்களும் சமம்தான். இங்கு குறிப்பிட்ட பிரி வினைக் குறிவைத்து, கோஷம் எழுப்புவது தவறு” என்று நவ்நீத் கவுர் குறிப் பிட்டுள்ளார்.

திரைக்கலைஞரான நவ்நீத் கவுர், தமிழில் ‘அம்பாசமுத்திரம் அம்பானி’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ஆவார். தெலுங்குப் படங்களிலும் நடித்துள்ளார். கடந்த 2011-ஆம் ஆண்டு, மகாராஷ்டிர மாநிலம் அமராவதி மாவட்டத்தைச் சேர்ந்த அர சியல்வாதியான ரவி ராணாஎன்பவரைக் காதலித்து திரு மணம் செய்து கொண்டார். ரவி ராணா ‘யுவா சுவாபி மான் பக்ஷ’ என்ற தனிக் கட்சி ஒன்றை நடத்தி வரு கிறார். இந்த கட்சியின் சார்பில் அமராவதி மாவட் டம் பட்நேரா தொகுதி எம்எல்ஏ-வாகவும் ராணா இருக்கிறார்.இந்நிலையிலேயே, மக்களவைத் தேர்தலில், தனது மனைவி நவ்நீத் கவுரை, தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் சுயேச்சை வேட்பாளராக அமராவதி தொகுதியில் ராணா போட்டியிடச் செய் தார். இந்த தேர்தலில் நவ்நீத்கவுர் 5 லட்சத்து 10 ஆயிரத்து 
947 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.

;