india

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

உலகிலேயே மிக வேகமாக வளரும் பெரிய பொருளாதார நாடு என்ற மோடி அரசின் கூற்றுக்கு முதலீட்டாளர்கள் வேறுவிதமாக பதில் தருகிறார்கள். கடந்த ஓராண்டில் இந்தியாவிற்குள் வந்த அந்நிய நேரடி முதலீடு பெருமளவு வீழ்ச்சி அடைந்துள்ளது. செப்டம்பருடன் முடிவடைந்த கணக்கின்படி கடந்தாண்டு 38 பில்லியன் டாலர் அளவுக்கு இருந்த அந்நிய நேரடி முதலீடு தற்போது 13 பில்லியன் டாலராக வீழ்ச்சி அடைந்துள்ளது. 

உலகின் பல முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதற்கு இந்தியாவையே தங்களது புகலிடமாக வைத்திருப்பதாகவும் இந்தியப் பொருளாதாரம் மாபெரும் வளர்ச்சி அடைந்து வருவதாகவும் கூறி வரும் மோடியின் பிரச்சாரத்தை இந்த முதலீட்டா ளர்கள் தகர்த்து வருகிறார்கள். மோடி ஆட்சியின் கீழ் இந்தியப் பொருளாதாரம் பேரழிவைச் சந்தித்திருக்கிறது என்றால் மிகையல்ல.