india

img

இந்தியாவில் வேலையின்மை 7.45% ஆக அதிகரிப்பு!

இந்தியாவில் வேலையின்மை விகிதம், கடந்த பிப்ரவரி மாதத்தில் 7.45% ஆக அதிகரித்துள்ளது. இதுவே கடந்த ஜனவரி மாதத்தில் 7.14% ஆக இருந்தது.
இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (CMIE) வெளியிட்ட தரவுகளின் படி, இந்தியாவின் நகர்ப்புறங்களில் கடந்த ஜனவரி மாதத்தில் 8.55% ஆக இருந்த வேலையின்மை விகிதம் பிப்ரவரி மாதத்தில் 7.93% ஆக சரிந்துள்ளது. அதேபோல், கிராமப்புறங்களில் கடந்த ஜனவரி மாதத்தில் 6.48% ஆக இருந்த வேலையின்மை விகிதம் 7.23% ஆக அதிகரித்துள்ளது.